பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

கணக்: சரிங்க

சிங்: ஆமா வேதம்மா! உன் பையன் சாம்பசிவம் என்ன செய்கிறான்? என்னமோ கழகம்னு வச்சிக்கிட்டு தெருவ சுத்திக்கிட்டிருக்கிற துரைராஜ் பயலோட சேர்ந்து இவனும் சுத்திக்கிட்டிருக்கான் சொல்லிவை.

வேத: சரிங்க.

—◯—

[புத்துலக கழகத்தில் சாம்பசிவம், வரதன், கோதண்டம், தங்கவேலு முதலியோர் இருக்கின்றனர்]

சாம்: என்னப்பா கோதண்டம், ரேடியோவில் ஏதாவது விசேஷம் இருக்கா? போட்டுப் பாரேன்.

(‘தாய்நாடு தேர போராடும் வீரரே’ என்று ரேடியோ ஒலிக்கிறது) (முடிந்தபின்)

கோத: நம்ம ரேடியோவில எங்கப்பா நல்ல பாட்டு கேட்க முடியுது. சிலோன் ரேடியோவுலதான் கேட்கணும்.

சாம்: வேற என்ன நிகழ்ச்சி இருக்கு?

கோத: திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் இரா. நெடுஞ்செழியன் பேசுகிறார்.

தங்க: அடடே வையப்பா கேட்போம்.

நெடுஞ்செழியன் பேச்சு:- ஆசை அச்சம்! இரண்டு சொற்களும் ஏமாற்றுக்காரர்கள் பயன்படுத்தும் சொல். ஆசைக்கு அடிமைப்பட்டவர்களுக்கு மோட்சத்தைப் பற்றிக் கூறுகிறார்கள். அச்சத்திற்கு அடிமைப்பட்டவர்களிடம் நரகத்தைப் பற்றிக் கூறி மேலும் பயமுறுத்துகிறார்கள். ஆசைக்குக் காரணமான மோட்சத்திலே வற்றாது பால் கரக்கும் காமதேனு உண்டு. நினைத்ததெல்லாம் கொடுக்கும் கற்பக விருட்சமுண்டு, ரம்பை, ஊர்வசி, திலோத்தமை, மேனகா போன்ற நடன மாதர்களின் சுகமுண்டு. இப்படியெல்லாம் கூறி அவர்களின்