பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

ஆசையை அதிகப்படுத்துகிறார்கள். அச்சத்திற்குறியவர்களிடம் நரகத்திலே கொட்டும் தேளுண்டு. கடிக்கும் பாம்புகளுண்டு. எரியும் நெருப்பிலே தள்ளுவார்கள் என்றெல்லாம் கூறி மேலும் அச்சத்தை உண்டு பண்ணுகிறார்கள், அவர்களிடம், இறந்தவர்களின் ஆவி நரகலோகத்திற்குச்சென்றால் கஷ்டமடையுமென்றும், மோட்சலோகத்திற்குச் சென்றால் நல்லதென்றும் ஏமாற்றுக்காரப் புரோகிதர்கள் கூறுகிறார்கள். இறந்தவர்களின் ஆவி மோட்சலோகம் செல்வதற்குத் தாங்கள் உதவி புரிவதாக கூறி திதி என்ற பெயரிலே இருப்பவர்களிடம் அரிசி,பருப்பு, காய்கறி வேஷ்டி முதலியவைகளே வாங்கிச் சென்று தாங்களே பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள். இதனை மக்களுக்கு விளக்கிக் கூறி திராவிட முன்னேற்றக் கழகம் பகுத்தறிவை தமிழகம் முழுதும் பரப்பி வருகிறது. அடுத்து சில ஆண்டுகளில் இவைகளுக்கு ஒரு முடிவு ஏற்பட்டுவிடுமென்று திட்டவட்டமாகக் கூற முடியும். (முடிகிறது)

தங்க : அருமையான சொற்பொழிவு.

சாம்: நம் கழகத்தின் மூலமாகவும் திதி கொடுப்பதைத் தடுக்க வேண்டும். நாளை என் தகப்பனாருக்கு திதி கொடுக்க வேண்டுமாம், புரோகிதனின் காலைக் கழுவி. அந்தத் தண்ணீரைக் குடிக்கவேண்டும் நாள்.

தங்க: சேச்சே! மகா கேவலமப்பா சொல்லாதே.

சாம்: இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்.

தங்க: புரோகிதர் சாமான்களைக் கொண்டு போகும்போது பறித்துக்கொள்ள வேண்டும்.

கோத: தங்கவேலு மூலையே மூளை. இந்தக் குரங்கு வேலை நமக்கு வேண்டாம்.

தங்க : இல்லேன்னா ரெண்டு கை வைப்போமே.

வரதன்: பலாத்காரத்தால் ஒருவரை அடிப்பதாக தங்கவேலு கூறுவதை நான் ஆட்சேபிக்கிறேன். இம்மாதிரியான