பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

வர: அதுதான் இவ்வளவு சொகுசா இருக்கிற!

லலி: சுந்தரமான உருவம்! ஆனா சுவாரஸ்யந்தான் இல்ல

வர: அடிப்பாவி அடிமடியிலே கை வச்சுட்டியே!

லலி: வரதா! நல்லா நெனச்சுப்பார்—உனக்கும் எனக்கும் ஒரே வயசு! வாலிபப் பருவம்! அவருக்கோ அடுத்த மாசம் அறுபதாவது வயது சஷ்டியப்த பூர்த்தி! நீ மட்டும் சரியினு சொல்லு. ரெண்டுபேரும் எப்பவும் இன்பகரமா இருக்கலாம்.

வர: (தழுவியபடி) ஆஹா! நேக்கு இப்போ என்ன சொல்ற துனே புரியல! லலிதா! [வாஞ்சிநாத சாஸ்திரி அந்நேரம் வந்து பார்த்து ஆத்தி ரத்துடன்]

வா: ஆ! அடிப்பாவி ஏண்டா டேய்! நீ எனக்கு மருமகனா! அட அயோக்கியப் பயலே: அடி சண்டாளி: இது ஆண்டவனுக்கு அடுக்குமாடி! நீ நாசமாப் போக! இன்னுமா நிக்குற? போடா வெளியே! போச்சு! என் மானமே போச்சு! இந்த அநியாயத்தைக் கேட்க இங்க யாருமே இல்லையா? ஐயா ஓடியாங்களேன்.
(அப்போது வீரன் வீட்டிற்குள் வருகிறான்)

வீர: என்ன அய்யரே! என்ன சமாச்சாரம்? வாஞ், என்னடி? சொல்லட்டுமா? ஊம்? டேய் நீ போடா வெளியே - போடா! (வரதனை வெளியே போகச்சொல்கிறார்)

வீர: என்ன அய்யரே! உதவிக்கு ஓடியாரச் சொல்லி சத்தம் போட்டே! இப்ப சொல்லட்டுமாங்கிற! வெளியே போடாங்கிற! என்ன சமாச்சாரம்? என்ன நடந்தது!

லலி: ஐயா, இங்க ஒன்னும் நடக்கல! அவரு சும்மா சத்தம் போட்டாரு. நீங்க போயிட்டு வாங்க.

வீரன்: அப்படியா அய்யரே?

லலி: ஆமாங்க நீங்க போங்க?