பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

வாஞ், ஏனா?. உம்..... எப்படியோ போங்க. நல்லவர் வீட்டுப் பிள்ளைகளாச்சே! ஏன் இப்படி கெட்டுப் போறீங்க? நேக்கு வேலை இருக்கு வர்றேன்.

தங்க: போங்க! சாம்பசிவம் காத்துக்கிட்டிருக்கான். கொடுக்கிறதுக்கு. போங்க. போய் வாங்கிக்கிட்டு வாங்க.

வா: ஏய்! பிராமணால தூஷிக்காதிங்கடா. ராவணனுக்கு மாதிரி கேடு காலம் வந்துடும். நாக்கு அழுகிப் போயிடும்.

தங்க: வந்துட்டாருடா கலியுக ராமர்.ராவணன் வீட்டுலேயே வச்சுக்கிட்டு எங்களப் பார்த்தாரா ராவணன்னு சொல்றீங்க?

வாஞ்: ஆ! என்ன சொல்றீங்க?

கோ: போ,போ, சாம்பசிவம் காத்துக்கிட்டிருப்பான். போய் வாங்கிக்கங்க. (போகிறார்கள்)

வாஞ்: நின்னு சொல்லுங்கடா, நேத்து ஆத்துல அந்த கண்றாவி, இன்னைக்கு இது. உம்,காலம் கெட்டுப் போச்சு. வேதம்மா நல்ல பொண்ணு. ஆனா பையன் ஒரு மாதிரி. பரவாயில்லை. பிறாமணாள் தோஷந்தான் நாட்டிலே ஜாஸ்தியாச்சே.

—◯—

[சாம்பசிவம் வீட்டில் கோதண்டம் தங்கவேலு எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வாஞ்சிநாதர் வருகிறார்]

சாம்: என்னப்பா? புரோகிதர் வர்ராரா?

தங்க: வந்துக்கிட்டே இருக்கான். (வாஞ்சி வருகிறார்)

சாம்: அதிகம் சொல்லவில்லை. வீட்டிற்குள் நுழையாதீர்.

வாஞ்; ஏன்? வேற புரோகிதர் வந்துட்டாரா?

சாம்: என் தந்தை இறந்த நாளான இன்று அவர் செய்த நல்லவைகளை நாங்கள் பேசி மகிழ்ந்துகொள்வோம், நீர் போகலாம்.

வாஞ்: போறதா? எங்க? ஏன்?

கோத:கோவில்ல மணி அடிக்க!