பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

வாஞ்: நிறுத்துடா! நானும் கொஞ்சம் படிச்சிருக்கேன். சாம்பசிவம் — இவனுகளோட சேர்ந்து வீணா கெட்டுப் போகாதே.

சாம்:அது எனக்குத் தெரியும். நீர் சொல்ல வேண்டியதில்லை.

வாஞ்: உன் அப்பா ஆவி அந்தரத்துல அலையுது. தங்க: அரிசி,பருப்பு காய்கறியா கொட்டிக்கொடு.

கோத: அவிச்சுத் தின்பான்..

சாம்: இப்போது நீர் மரியாதையாகப் போகப் போறீரா இல்லையா?

வாஞ்: போகலேன்னா என்னடா செஞ்சிடுவேள்.

சாம்: என்ன செய்வோமா? (அடித்து துரத்துகிறார்கள். அலறுகிறார் ஐயர்)

வாஞ்: வேதம்மா! வேதம்! வேதம்!! இங்க வாயேண்டி வேதம்: (வந்து) டே ! சாம்பசிவம். இவரு நம்ம புரோகி தர்டா.

வாஞ்: நல்லா சொல்லேண்டி.

தங்க: பாத்தியாப்பா, உன் அம்மாவை அவ இவன்னு பேசுறான் மரியாதை இல்லாம்.

சாம்: ஏய்! மரியாதையாகப் பேசு, தலையை திருகி எறிந்து விடுவேன். ஜாக்கிரதை.

வேதம்: உன் அப்பா இறந்ததற்கு திதி கொடுக்க வந்திருக்காரப்பா ஐயரு.

சாம்: அம்மா, என் தகப்பனார் இறந்த கவலை எனக்கும் உங்களுக்கும், இவனுக்கு என்ன?

வேத: அய்யய்யோ. கழகத்துல சேர்ந்து கெட்டுப் போயிட்டானே. மாரியாயி — நீதான் காப்பாத்தணும்.

வாஞ்: பிறாமணாளுக்கு மரியாதையே இல்லையே. வேதம்மா நான் சாபமிட்டா உன் மகன் விளங்க மாட்டான்.

வேதம்: உங்க வாயினால் ஒன்றும் சொல்லாதீங்க சாமி.

சந்-2.