பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

துரை: திதி என்பது புரோகிதர்களின் ஏமாற்றுகளில் ஒன்று! அதை நம்பி அரிசி, பருப்புவகைகளை அவர்களுக்கு வாரிக் கொடுத்து ஏமாறாதீர்கள் என்று நாங்கள் நாட்டைத் திருத்தி வரும்போது உங்களைப்போன்றோரது எதிர்ப்புகள் இருக்குமென்று எங்களுக்குத் தெரியும். சாம்பசிவத்தை சிறையிலே பூட்டிவிட்டோம் என்று இருமாந்து பேசுகிறீர். அவன் சிறையில் இருக்கும் இந்நேரம் வெளியில் வந்தவுடன் உங்களைப்போன்றோரை ஒழிக்க அல்லும் புகலும் மீண்டும் பாடுபட திட்டம் வகுத்துக்கொண்டுதானிருப்பான்.

வாஞ்: அவன் வர்ரதுக்கு முன்னாடியே அடுத்த வெள்ளிக் கிழமை நம்ம சிவன் கோவில்ல, எல்லாரையும் கூப்பிட்டு ஒரு முடிவு கட்டி அவனை ஒழிக்க திட்டத்திட்டப் போனோம்.

துரை: அடுத்த வெள்ளிக்கிழமையா?

வாஞ்: ஆமா.

துரை: சிவன் கோவில்ல?

வாஞ்: ஆமா.

துரை: திட்டம் போடப்போறீங்க எல்லாரும்?

வாஞ்: ஆமா, ஆமா!

துரை: சாமிகளே அதுகிடக்கட்டும். நம்ம ஆத்துலே ஏதோ விசேஷம்னாகளே— என்ன விசேஷம்

வாஞ்: திதி சமாச்சாரமா இருக்கும்.

துரை: அது இல்லைங்க. வேற என்னமோ........ன்....னு.......... வரதனும்.......(ஐயர் ஓடுகிறார்)

—◯—

(வேதம்மா வாஞ்சிநாதரைக் கண்டவுடன் கண்ணீர் வடிக்கிறாள்)

வாஞ்: அழாதே வேதம்மா. என்ன செய்கிறது? தங்கமான குணம் உனக்கு. உன் வயிற்றுல அந்த தறுதலை பிறந்திருக்கு.