பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

வேத: என் மகன் அப்படியெல்லாம் பேசாதீங்க சாமி.

வாஞ்: தங்கவேலு என்னென்ன பேசினான். நீயாவது கண்டிச்சியோ?

வேத: அவனுகளோட சேர்ந்துதான் இவனும் கெட்டுப் போயிட்டான்.

வாஞ்: இந்த வாஞ்சிநாத சாஸ்திரிய அடிச்சானே. அடிக்கலாமா? நீ போண்ணு! நீயே சொல்லு. நான் சாபம் போட்டா என்ன ஆகிறது.

வேத: பெத்த வயிறுங்க சாமி. அப்படியெல்லாம் ஒன்னும் சொல்லிப்பிடாதீங்க.

வாஞ்: பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு!அதுசரி... திதிய எப்படியும் செய்யணுமே. ஏதாவது பணம் இருக்கா இப்போ?

வேத: அஞ்சு ரூபாதான் சாமி இருக்கு.

வாஞ்: சரி ......... கொடு. கோயிலிலேயே செய்துடுறேன்.

வேத: செலவுக்கு இதுதானுங்க இருக்கு. இந்தாங்க. (ஐயர் வாங்கிக் கொள்கிறார்)

வாஞ்: பையன் ஒரு வாரத்துல வந்துருவான், நான் வரட்டுமா ? (போகிறான்)

—◯—

[தேனுறும் தமிழ் மாநாடு--ரிக்கார்டு இசை
உழைக்காது வஞ்சகத்தன்மை- பிச்சைக்காரன் பாட்டு.]

[சிவன் கோவில் வாசலில் பிச்சைக்காரன் உட்காருகிகிறான். வாஞ்சிநாதர் - சிங்காரவேலர் மற்றும் சிலர் வருகின்றனர்]

வாஞ்: இதுனால ஒண்ணும் நடக்காது. பயகல கையக்கால ஒடிக்கணும்.

சிங்: இன்னைக்கு அடிச்சா நாளைக்கு? பயக பெரிய இடத்துப் பயக.