பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

மோ பேசினான். இனிமே பேசுவியா? நல்லூர் ஜமீன்தாரருக்கு சந்திராவை கொடுன்னா சாம்பசிவத்த சந்திரா காதலிக்கிறா — நான் என் மகள் தரமாட்டேன்னு சொன்னியே இனிமே பார்ப்போம் உன் திமிரை. இந்த வாஞ்சிநாத சாஸ்திரி எத்தனை நாளைக்குத் தான் வாழைக்காய் வாங்கியே பிழைக்கிறது? இனிமே நான் தான் இந்த ஊருக்கு ராஜா! (பணத்தையும் நகைகளையும் மறைத்து விடுகிறான் வாஞ்சி, ராம்சிங்கிடம் சிறிது பணத்தை கொடுத்து) டேய் பொம்மன்! நீ பொழுது விடியிறதுக்குள்ளே ஓடி விடு. (ராம்சிங் ஓடி விடுகிறான் ) பொழுது விடுஞ்சப்பிறகு பார்ப்போம் முதலியார் சமத்த.
(மயக்க மருந்தை மூக்கில் வைத்தபடி மயங்கி விழுகிறான் வாஞ்சி)
சிங்- (எழுந்து) ஆ, (திகைக்கிறான்) அடப்பாவி பிராமணா! எழுந்திருடா.என் சொத்தெல்லாம் போச்சே. ராம்சிங்கையும் காணோமே.டேய், எழுந்திருடா (கதறுகிறார்)
வா - லலிதா! ஏண்டி எழுப்புற?
சிங்- டேய் பாவி!
வா- எங்கே இருக்கேன்!
சிங்- அடப்பாவி எழுந்திருடா. என் சொத்துப் போச்சே.
வா. ராம்சிங் எங்கே?
சிங்- நம்ம ரெண்டு பேரையும் சொக்கு பொடி போட்டு மயக்கிட்டு எல்லாத்தையும் அடிச்சிக்கிட்டுப் போயிட்டானேடா.
லா- பகவானே!
சிங்- அது யாருடா ராம்சிங்!
வா- ஹிமாலயம்னு சொன்னான்.
சிங்- ஐயோ ! எங்கே போனானோ தெரியலையே.
வா- போலீஸ்ல சொன்னா கண்டுபிடிச்சுடுவா, வாங்க
சிங்- வேண்டாம். கோவில் திரு ஆபரணம் அதிலே இருக்கு. போலீஸ்ல சொன்னா ஆபத்து. அடப்பாவி! உன்பேச்சை நம்பி கெட்டேனே. கெட்டேனே.
வா- அம்பாள் ஆபரணம் வேற அதுல இருக்குன்னு சொல்றேன். நளச்சக்கரவர்த்தி கதை போல ஆகிப்போச்சே முதலியாருக்கு. அடபகவானே!

◯—◯