பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

[துரைராஜ் மடாதிபதி போல் வேஷமிட்டு உபதேசம் புரிகிறான்] துரை- அரஹர நமப்பார்வதி பதே!
சிஷ்யர் கூட்டம்- அரஹர மகாதேவா!
துரை- கந்தபூபதி இருப்புக்கணக்கு அறிக்கையை படி.
கந்த- ஆபரணங்கள் இருப்பு மூன்று லட்சத்து எண்ணூற்றி நாற்பத்தேழு ரூபாய் ஏழணா. ரொக்கம் இருப்பு ஒன்பது லட்சத்து தொளாயிரத்தி நாற்பத்தாறு ரூபாய் ஐந்தணா பதினோரு பைசா.
[பொட்டலங்களாக கட்டிக் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது முன்னால், துரைராஜ் ஒவ்வொன்றாக எடுத்து]
துரை - இதில் ஒரு லட்சத்தை வேலையற்றோர் உதவிக்காக சர்க்காருக்கு அனுப்பு. இரு—பாடுபட்டு பாடுபட்டு உருக்குலைந்தவர்களை விட்டு விட்டு ஊரிலுள்ள ஊதாரிகளுக்குத் தருகிறார்களாம் சர்க்கார். வேண்டாம். வேண்டாம். அவர்களுக்கு உழைப்பாளிகள் யார் என்பது தெரியாது. வேறு யாருக்கு அனுப்பலாம்! வினோபாவுக்கு அனுப்பு. இதை நடைப்பாதை செப்பனிடுவதற்குக்கொடு இதை இசை வளர்ச்சிக்கும் இரவு பள்ளிகளுக்கும் பயன்படுத்து. இதை அரியலூர் ரெயில் விபத்தால் அவதிப்பட்டுள்ள குடும்பங்களுக்குக் கொடு. இதைவேலையல்லாதவர்களுக்கு வேலை கொடுக்க நல்ல தொழிற்சாலைகளை கட்டிக் கொடு. (கந்தபூபதி முகத்தைச் சுழிக்கிறான்) கவலைப் படாதே அப்பனே! எல்லாம் அவனருள் போல நடக்கும். நான் இப்படிச் செய்வது எல்லோருக்கும் வியப்பாகவும் மகிழ்ச்சியுகமாகத்தானிருக்கும். ஆனால் முருகதாசருக்கும் கந்தபூபதிக்கும் வேம்பாக இருக்கும். நான் இப்படி வாரி வழங்கியதற்கு எல்லோரும் காரணம் கேட்கலாம். நேற்று நான் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் போது இமய மலையில் எழுந்தருளிகைாயத்தில் பள்ளிகொண்டிருக்கும் என்அப்பன் அறன் என்கனவிலேவந்தார். நான் அவரை நமஸ்கரித்து நின்றேன். என்னப்பன் என்னைப் பார்த்து அட மூடா! நீ நன்றாக வேளாவேளை உண்டு கொழுத்து உறங்குகிறாய்,நாட்டிலே உள்ள லட்சோப லட்ச மக்கள்