பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

துரை- அறன் சொன்ன அஞ்ஞானம் என்னைவிடாமல் துரத்திக்கொண்டு வந்துவிட்டது. அடித்துவிரட்டுங்கள் விடாதீர்கள்.

(எல்லோரும் அடிக்கிறார்கள் மடாதிபதியை. அவர் அலறியபடி ஓடுகிறார்)

—◯—

[துரைராஜ் மடாதிபதிவேடத்தை கலைத்துவிட்டு மாறு வேடத்துடன் மடாலய நகைகளையும் பணத்தையும் எடுத்து வந்து மாயேந்திரன் என்றபெயரில் ஜெமீந்தாரராகிறான். மடத்தில் உடனிருந்த வெள்ளை என்பவனிடம்]

மாயே: மடாலயத்தில் என்னடா பேசிக்கொள்கிறார்கள்?

வெள்ளை : சாமி ஜோதியிலே கலந்துட்டதாக சொன்னாக.

மாயே: மடாலய மன்னார்சாமிகள் நம்பிவிட்டார்களா?

வெள்ளை: ஆமாங்க சாமி!

மாயே: ஏண்டா? நான் என்ன பரம்பரை சாமியா ? என்னை ஏண்டா சாமியினு கூப்பிடுற ? இப்ப யாருடா மடாதிபதி?

வெள்: அதுதாங்க தகறாரா இருக்கு,முருகதாசரா—கந்த பூபதியான்னு இன்னும்தெரியல! அப்போ நீங்க உண்மை யான மடாதிபதி இல்லைங்களா?

மாயே: முருகதாசரும் — கந்த பூபதியும் சேர்ந்து மடாதி பதியை ஒழிக்கச் சொன்னார்கள் என்னிடம். நான் அங்கு ஒரு கபடநாடகமாடினேன். அவர்கள் என்னை பயன்படுத்தினார்கள். நான் அவர்களை பயன்படுத்திக் கொண்டேன்.

வெள்:அப்படியாசாமி!

மாயே: மறுபடியும் சாமியினு சொல்றியே. என் பெயர் மாயேந்திரன்.

வென்: சரிங்க.

மாயே: இது அழகர் மடாலயமுமில்லை. நானும் அழகர் மடாதிபதியில்லை. நீ இங்கு என் சிஷ்யனுமில்லை. நீ என் மெய்க்காப்பாளனாக இரு. நான் சில கொள்கைகள் நிறைவேற மக்களுக்காகப் பாடுபடப்போகிறேன். யார் வந்து எது சொன்னாலும் சரி என்று கேட்டுக்கொள். எது கேட்டாலும் தெரியாது என்று கூறிவிடவேண்டும். வா!