பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

(பணத்தை பறிகொடுத்து விட்டு வெறிபிடித்த நிலையிலிருக்கிறார் சிங்கார வேலர், வாஞ்சிநாத சாஸ்திரியும் உடனிருக்கிறான். அத்தை வீடு சென்றிருந்த சந்திரா திரும்பிவந்து தந்தையைப் பார்த்து)

சுந்: என்னப்பா உடம்புக்கு? ஏன் தலைவிரிகோலமா இருக்கிறீங்க?

வாஞ்- பெரிய விபத்து ஏற்பட்டுப் போச்சுது.
சந்: விபத்தா?
வாஞ்: உன் தந்தைக்கு பெரிய ஆபத்து.
சந்: ஆபத்தா? என்ன இது புரியும்படி சொல்லுங்களே?
சிங்: சந்திரா? என் அருமை மகளே! நடந்ததை சொல்லக் கூடாது. உன் காதில் நாராசம் பாய்ச்சியது போலிருக்கும். ஆனால்...
சந்: என்னப்பா அது?
சிங்: அடுத்த வெள்ளிக்கிழமை முகூர்த்தம்.
வாஞ்: திவ்யமான நாள்.
சந்: யாருக்கப்பா திருமணம்?
சிங்: உனக்குத்தானம்மா.
சந் : எனக்கா? அதை இன்றைக்கு ஏனப்பா சொல்கிறீர் கள்? நாளை உனக்கு திருமணம் என்று, வியாழக்கிழமை வந்து வண்டியிலேறு என்று கூறுவதுதானே! மாப்பிள்ளை அவர் தானே?
சிங் : இல்லையம்மா, ஒரு ஜெமீன்தார்.
சந் : என் காதலர் சாம்பசிவமில்லையா? ஆ! என்னப்பா இது? யார் செய்த முடிவு இது? ஏனப்பா பேச மறுக்கிறீர்கள்? ஆட்டை வளர்ப்பது கறிக்காகத்தானே தவிர அதன் மீதுள்ள பாசத்தால் இல்லை என்பதை இப்போது தான் தெரிந்துகொண்டேன். இருந்தாலும் நான் இதற்கு சம்மதிக்க மாட்டேன்.
சிங்: சந்திரா என் பேச்சை மறுக்காதே. இதற்காகவா உன்னை என் கண் இமைபோல வளர்த்தேன்?
சந்: பஞ்சவர்ணக் கிளியை வளர்த்து பூனைகளிடம் பறி கொடுத்திருப்பதை கதைகளில்தான் படித்திருக்கிறேன். இப்போது அதை நேரிலேயே காண்கிறேன்.
சிங்: நல்லூரானுக்கு வாக்குச் கொடுத்து விட்டேன் சந்திரா. அவருக்கென்ன? பெரிய பணக்காரர்!