பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

[வாஞ்சிநாதர் வீட்டிலுள்ள நகைகளை காண்பிக்கிறார் மாயேந்திரன் சிங்காரவேலருக்கு]

மா-பார் துரைராஜ் களவாடிக்கொண்டு ஓடிவிட்டதாக போலீஸில் புகார் செய்தீரே- அந்த மாங்காய் மாலை.

சிங்- ஒரு குற்றமும் செய்தறியாத துரைராஜின்மேல் அநியாயமாக பழிசுமத்திவிட்டேனே. முதலில் துரைராஜ்காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும். ஆ! திருவாபரணங்கள். ரசவாதத்தின்போது களவுபோனவைகள்.

மா- மாங்காய் மாலை கிடைக்குமென்றுதான் அழைத்து வந்தேன். இவைகளும் இங்குதான் இருந்திருக்கின்றன. ஆனால் இனியும் வாஞ்சிநாதரைப் போன்ற வஞ்சகர்கள் வலையில் சிக்காமல் வாழுங்கள்.

சிங் - இனி நாள் வஞ்சகத்துக்கு அடிமையாக மாட்டேன். வைதீகத்துக்கு இடமளிக்கமாட்டேன் பார்ப்பனியத் தைப் பாதுகாக்க மாட்டேன். பகுத்தறிவு பரப்புவேன். ஜாதிவேதம் ஒழியட்டும். மூட நம்பிக்கை ஒழியட்டும் ! புரட்டர்களின் கொட்டம் அழியட்டும்.

மா- செல்வந்தான் சீரழிக்கும். சிங்- இனி உங்கள் அடிமை நான். என்னை தாங்கள் சீட னாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மா-சீடர்கள் சூழ இருந்தேன் ஒரு காலத்தில் மடத்தில். ஆனால் உங்களுடையமாறுதல் துரைராஜுக்கு மகத்தான வெற்றி! நீங்கள் திருந்தி விட்டதை வாயளவில் நான் நம்பத்தயாராயில்லை. அதற்கு ஒரு பரீட்க்ஷை செய்து பார்க்கபோகிறேன். சிங்- என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்.

மா-சாம்பசிவத்துக்கு தங்கள் மகள் சந்திராவை திருமணம் செய்துவைக்க தாங்கள் சம்மதிக்க வேண்டும்.

சிங்- ஊர் ஒப்புக்கொள்ளவேண்டுமே.

மா-நெற்றியில் விபூதி பூசினால் சரி - பக்தனென்றும் ஊர் நம்பிவிடுமோ? வாஞ்சிநாதரைப் போல் எத்தனை பேர் இருக்கிறார்கள்? சிங்- ஆமாம்.

மா-தாங்கள் புத்துலகக் கழகத்தில் சேர்ந்து முதலில் கல்யாணத்தை நடத்த ஏற்பாடு செய்புங்கள். சிங் -தங்கள் விருப்பம்போலவே செய்கிறேன்.