பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

(மாயேந்திரன்போக்கை சந்தேகித்து வரதன் தனிமையில் நின்று சிந்திக்கிறான்)

வர: பிளவு ஏற்படுத்தவோ வஞ்சக வலையில் சிக்க வைக் கவோ முடியவில்லை. இவனை ஒருகை பார்க்கலாமென்றால் தேர்தலில் எங்கு நிற்பது என்று இதுவரை தெரியவில்லை. துரைராஜ் செய்தை போலவே இருக்கிறது இவன் செய்வதும். பிறாமணாள் கூடாது என்கிறான். அவனுடைய சிஷ்யனாக இருப்பானோ இவன். பேச்சையும் நடையையும் பார்த்தால் அவனன்றே தெரிகிறது. இதை கவனிக்கவேண்டும். துரைராஜாகவே இருந்தால் தொலைக்க வேண்டும் மாயேந்திரா!- நீதான் துரைராஜா? தரைராஜ் நி தான் மாயேந்திரன். உன் மர்மத்தைக்காண இதோ வருகிறேன். [புத்துலக கழகத்தில் மாயேந்திரன் முன்னிலையில் சந்திரா -- சாம்பசிவம் திருமணம் நடைபெறுகிறது]

மா:நான் வருகிறேன். வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன். [மாயேந்திரனிடம் வரதன் வருகிறான்)

வர:குட்மார்னிங் ஜமீன் தார்வாள்! குட்மார்னிங்! ஜமீன்தார் புகழ் ஊரெல்லாம் பரவுகிறது,

மா: ஜமீன் தாரர்களை புகழ்வதுதான் உன் தொழிலா? நீயார்?

வர: கலியுக ஜமீன்தாரரை காண வந்த நான் வரதன். என்ன துரைராஜ் -- என்னை தெரியாதது போல் பேசுகிறாயே. உன் பெயரைத்தான் மாற்றிக் கொண்டாயென்றாலும் உருவமும் குரலும் நீ பழைய துரைராஜ் என்பதை கூறுகின்றனவே

மா:துரைராஜா? என்ன உளறுகிறாய்? எங்கு வந்தாய்?

வர: ஆஹா! நடிப்பு பிரமாதம்! நீ ஊராரை ஏமாற்றலாம் துரைராஜ். ஆனால் உன்னுடனேயே நெடுநாள் பழகிய என்னை ஏமாற்ற முடியது

மா :என்னடா பிதற்றுகிருய்?

வர:பிதற்றுவது நானல்ல கோவிலில் அம்மன் மாங்காய்மாலையை திருடிக்கொண்டோடிய துரைராஜ் நீ என்பது எனக்குத் தெரியும. அழகூர் மடத்திலே நீ கொள்ளையடித்து வந்து மாயேந்திரன் என்ற பெயரிலே இருப்பது எனக்குத் தெரியும், போலீஸார் கண்களுக்கு தப்பி இந்த கோலத்திலிருக்கும் வள்ளல் என்று தெரிந்தே வந்தேன். சரி - எனக்கு அவசரமாக ஒரு ப்பைவ்தௌஸன் ருப்பீஸ் வேண்டும் கொடு. நீ எப்படியோ போ.