பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


மா: டேய் வரதா! நான் துரைராஜ் என்பது தெரிந்தும்,பார்ப் பனீயத்தை இந்த நாட்டைவிட்டு அறவேஒழிக்க அல்லும் பகலும் பாடுபடுகிறவன் என்று தெரிந்திருந்தும் என்னை மிரட்டி பணம் கேட்க வந்த உன் தைரியத்தைப் பாராட்டுகிறேன். உனக்கு-உன் வர்க்கத்தினருக்கும் காலணு கூட என் கையிலிருந்து கிடைக்குமென்பதை மறந்துவிடு உனக்குத் தெரிந்ததை செய்துகொள். முதலில் இவ்விடத்தை விட்டு மரியாதையாக வெளியே போய்விடு.

வர: என்ன துரைராஜ் மிரட்டுகிறாய் நீ செய்திருக்கிற கொள்ளைக்கு போஸில் உன்னை பிடித்துக் கொடுத்தால் உனக்கு ஆயுள் தண்டனை கிடைக்குமென்பதை மறந்து போகிறாயே. நீ எப்படியோ இரு. ப்பைவ் தௌஸன் மட்டும் கொடு.

மா: உன்னைப்போல் கோழையல்ல நான். உயிருக்குப் பயப்பட. மீண்டும் சொல்கிறேன்; மரியாதையாக ஓடிவிடு.

வா: சரி.....டு தெளசன்ட்டாவது கொடு.

மா:ஊ...ஹும்.நடக்காது.

வா- கவனித்துக் கொள்கிறேன் உன்னை. (போகிறான்) (வெளியே சென்றிருந்த வெள்ளை வருகிறான்)

மர- வெள்ளை1 இதுவரை நீ என்னுடன் இருந்து உதவி புரிந்ததற்காக உன்னை நான் என்றும் மறக்கமாட்டேன். உனக்காக நான் பேங்கில் உள்ள பணத்தில் ஐயாய ரத்தை உன் பேருக்கு கொடுத்துவிடும்படி இதில் எழுதியிருக்கிறேன். பெற்றுக்கொண்டு சுகமாக வாழ்.

வெ-கடைசிவரை நான் தங்களிடமே இருந்துடுறேன் எசமான்.

மா- வேண்டாம் என் வேலைகள் முடிந்துவிட்டன. நீ போய் வா. போகும்போது அப்படியே சாம்பசிவத்தை வரச்சொல்லிவிட்டுப் போ. (வணங்கிவிட்டு செல்கிறான்) [மாயேந்திரன் உட்கார்ந்திருக்கிறான். சாம்பசிவம் வருகிறான்.)

சாம்- வணக்கம்! தாங்கள் அழைத்ததாக வேலைக்காரன் வந்து கூறினான்.

மா- ஆமாம். ஜாலியாக இருவரும் பேசிக்கொண்டு இருந் தீர்களாம், வந்து சொன்னான். சாம்பசிவம் உன்னிடம் சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசவே உன்னை அழைத்து வர ஆள் அனுப்பினேன்.

சரம்- முக்கியமான விஷயமா? என்ன அது?