பக்கம்:சபாபதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) சபாபதி f{} ச. என்னுப்பா அது, இங்கில்சுலே இவ்வளவுண்டு சொன்னே, தமுழ்லே அதுக்கு இவ்வளவு பெருசா அர்த்தம் சொல்ரையே ? ச.மு. இங்கிலீஷ் இண்ணு அப்படித்தான். தி, போதும் நாயின படிச்சது - அப்புறம் ஒடம்பு கெட்டுப் போவப்போவுது. தெ. ஆமாம் அண்ணி - கிறுத்தச்சொல்லுங்க, ரொம்ப படிச்சா ஒடம்புக்கு குடு இண்ராங்களெ. ச. ஆமாம்மா, படிச்சி படிச்சி அப்பாவுக்கு ரொம்ப சூடா போவுதம்மா - நீங்க இன்னுெருதரம் வர்ரப்பொ, கொஞ்சம் பாதுமல்வா கொண்டாங்க. ச.மு. அடே சபாபதி ! ச. இல்லெப்பா, தோனே சொன்னேப்பா, பாதுமல்வா இஷ்டமிண்ணு. ச.மு. சரிதான், வாயெ மூடு. தெ. தம்பி - பாஸ் பண்ணி யிருக்குதுங்களா ? தி. பாசுக்கென்னு மச்சி - பத்து ருபா பரீட்சைக்கு போயி இருக்குது-இந்த வர்ஷம் பத்துருபா கட்டியிருக்குதே, பரீட்செ பண்ரவங்களுக்கு - பாசு கொடுக்காதிருப் பாங்களா ? தெ. சரிதான் மச்சி-அப்பொ-காழியாவுது-நானு வரட் டுமா ?-- தி. இன்னம் கொஞ்சம் இருந்து போங்களேன் . இதுக் குள்ள என்னு அவசரம்? தெ. இல்லே காழியாச்சி-அடே கிருஷ்ணசாமி - போய் சொல்லிவிட்டு வாடா! - உம் - வெக்கமென்ன?உங்க அத்தான ஆவப்போராரு, அவரோடே பேசரத் துக்கு வெக்கமென்னு உனக்கு ? கி. (சபாபதி முதலியார் அருகில் போய்) கான் போயி வர்ரேன். ச.மு. அல்லோ (halo ) வா தம்பி-உன்னெ பார்க்கவே யில்லே இதுவரைக்கும்-வா உக்கார்-என்ன சமா சாரம்?-கண்ணு படிக்கரையா? எந்த கிளாஸ்லே (class) படிக்கரெ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/21&oldid=821665" இலிருந்து மீள்விக்கப்பட்டது