பக்கம்:சபாபதி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f சபாபதி (அங்கம் 1 ச. அதென்னமாப்பா முடியும் எம்பேரெ நானே மாத்திக்க முடியுமா ? - ச.மு. ஏண்டா முடியாது? ச. நானே என்ன மாப்பா மாத்திகிறது ? ச.மு. ஏன் வேறே பேர் வைச்சிக்கோ. ச. ஓ! அப்படி சொல்ரையோ-ஆன-அதுக்கு ரொம்ப செலவு புடிக்குமே அப்பா. ச.மு. அதுக் கென்னத்துக்குடா செலவு ? ச. எனக்கு பேர் வைச்சப்போ, எங்க பந்துகோலுங்களுக் கல்லாம் எவ்வளவு சாப்பாடு கிப்பாடெல்லாம் போட் டாங்களாமே. அந்தமாதிரி செய்யத் தேவலேயா? ச.மு. அதுக்கு எவ்வளவு புடிக்கும் ? ச. ஒரு அஞ்சி ரூபாயாவது புடிக்காதா? அ.மு. அம்மாவெ கேட்டு அஞ்சி ரூபா வாங்கிதர்ரேன் - பேரெ மாத்திக சிக்கிரம். - ச. அப்படியே ஆவுட்டும் அப்பா, - ச.மு. ஊம்- என்னுண்னு பேரே மாத்திக்கரே ! ச. ஊம்-கானு-ஊம்-ரத்தினசபாபதி இண்ணு பேரு வைச்சிக்கிறேம்பா, - ச.மு.வாட் கான்ச்ென்ஸ்! (what nonsense) சபாபதியே ஒதவாது இண்ணு, ரத்தின சபாபதி என்னடா அது! அதெல்லாம் ஒதாவது, வேறே என்னமான பேர் வைச்சிகனும். ச. அப்படியே ஆவட்டும்பா. ச.மு. சரிதான், நீ போயி தெருவண்டெ பாரு, என் சினேகித ருங்க யாராலுைம் வர்ராங்களா இண்ணு. (போகிருன்) ச. இதோ வர்ராரப்பா ஒருத்தரு. முருகேசம் வருகிருன். Qp. (5. Folgoff, 1975if. (good evening brother) ச.மு. குட் ஈவினிங், வாங்க வாங்க 1-என்ன பிரதர், இவ் வளவு லேட்டா (late) வங்தைங்களே ? நான் காலு மணிக்கெல்லாம் வரச்சொல்லலே? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/6&oldid=821734" இலிருந்து மீள்விக்கப்பட்டது