பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 சபாபதி முதலியாரும், பேசும் படமும் (மாசிலாமணி முதலியார் வருகிரு.ர்.) ச. மு. ஒஹோ நீங்களா மாசிலாமணி முதலியார் வாங்கஏன் ஐயா புதிய கதை வேணுமுன்ன, பழங்கதைகளை யெல்லாம் சேர்த்து என்னமோ கதம்பமா அனுப்பிச்சி ருக்கிங்களே எங்கே புடிச்சீங்க இதுகளையெல்லாம். மா. இல்லேங்க இது ஒரு புதுமாதிரிங்க 3 வருஷமா பட்டினத் திலே ஒவ்வொரு படத்திலேயும் ஜனங்க சந்தோஷப் படுகிற காட்சிங்க என்னண்ணு பாத்துக்கினு வந்தேன் அந்த காட்சிகளை யெல்லாம் கோத்து புது கதையை ஜோடிச்சுட்டேன் ஏங்க இது ரொம்ப பைன் (fine)ன இருக்காதுங்க. ச. மு. அந்த காட்சிங்களே எழுதினவங்களெல்லாம் நம்ம பேரிலே மாஜிஸ்ட்ரேட் கோர்ட்லே சம்மன் பண்ணு இன்னும் ரொம்ப பைன் ஆகும். இந்தாங்க உங்க கதை எடுத்தும் போயி குப்பை தொட்டிலே போடுங்க. வே. ச. வாளுங்க பழங் காகிதங்களே வாங்கிப் போராங்களே அவுங்ககிட்டே குடுத்தீங்கண்ணு துட்டு குடுப்பாங்க. மா. இது போன போவுதுங்க இண்ணேக்கி இன்னெரு புதுக் கதை கொண்டாந்திருக்கேங்க. ச. மு. காட்டுங்க பாக்கலாம் (வாங்கிப் பார்த்து) என்னேயா இது 'வள்ளியும் சுப்ரமணியரும்'-என்ன விளேயாட ரிங்களா என்னு-இதுவா புதுக்கதை இந்த வள்ளி கல் யாணம் எத்தினி தரம் போட்டிருக்காங்க பேசும் படத் திலெ. மா. இது கல்யாணத்திலே முடியலிங்க, நான் எழுதினத் திலே சுப்ரமணியர் வள்ளியே கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு பூடரார் கடைசிலே கோவிச்சிக்கினு. ச. மு. சரிதான்!-அப்படியான இந்த பேசும் படத்தைநாங்க பாக்கமாட்டோம்னு எல்லோரும் முதல்லேயே கோவிச் சிக்கினு ஆடுவாங்க போயி வேறே எதுவான யுக்தி பண்ணி வாங்க போங்க (மாசிலாமணி போகிருர்) மணி அடிக் கிருர். கிருஷ்ணசுவாமி முதலியார் விரைந்து வருகிருச்