பக்கம்:சமணமும் தமிழும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணத் திருப்பதிகள் 101 பெகள் இன் இவுருவம் புசத்துக்குப் போகும் பாதையில் ஒரு சமணத் திருவுருயம் இருக்கிறது.' காமாட்சியம்மன் கோயிலின் இரண்டாவது பிராகாரத்தில் சமண உருவங்கள் இருப்பதாகக் கூரப்படு கிறது." யதோக்காசிபெருமான் கோயில் அருகில் ஒரு சமண வுருவம் இருச்சிறது.' மாகறல் : இங்கு ஆதிபட்டாாகர் (இருஷபதேவர்) கோயில் ஒன்று உளது. இவ்வூர் அடிபட்ட அழகர் கோயிலில் இரண்டு சமண உருவங்கள் உன்னை .' இவ்வூர் திருமாலீஸ்வரரைத் திருஞான சம்பந்தர் பாடியுள்ளார். சம்பந்தர் இங்கு வந்தபோது இங்கிருந்த சமணர் ஓரத்தப் பட்டனர் என்று இவ்வூர் ஐதீகம் கூறுகிறது. இங்குள்ள அதிபட்டாரகா கோயில் இப்போது கிலமாய்க் கிடக்கிறது, இவ்வூரிலிருந்த சமண தீர்த்தங்கரரின் கல்சிலை ஒன்று என் நண்பர் ஒருவர்க்குக் கிடைத்திருக்கிறது. ஆர்ப்பாக்கம்: மாகறலுக்கு ஒரு மைலில் உள்ளது. ஆரியப் பெரும்பாக்கம் என்பது இதன் சரியான பெயர், இங்கு ஆதிநாதர் கோயில் உள்ளது.' விவார் : இதுவும் மாகறலுக்கு அருகில் உள்ள ஊர். இங்கும் சிதைந்து போன சமணத் திருவுருவங்கள் காணப் படுதின் தன. குன்னத்தூர் (ஸ்ரீபெரும்பூதூர்த் தாலுகா): இங்குள்ள திருநாகேஸ்வரர் கோவிலில் உள்ள சாசனம் பெரியநாட்டுப் பெரும்பள்னி என்னும் பள்ளியைக் கூறுகிறது. இது சமணப் பள்ளியாக இருக்கக்கூடும். இந்தத் தாலுகாவில் அம்மணம்பாக்கம் என்னும் இனாம் கிராமம் ஒன்று உண்டு, இப்பெயர்கள் இங்குச் சமணர் இருந்ததைக் குறிக்கின்றன. 1. M, A, R. 1898, Pugs 4. 2. M. A. R. 139S, P. 4. 8. Top. List. P. 178. 4. M. A. R. 1997. P. 4., M. E. R. 1923, P. 4. 5. Ep. Rep. 19:23. P. 129. B. S. I. Epi, Rep. 1923. Page 4.