பக்கம்:சமணமும் தமிழும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சமணமும் தமிழும் இவ்வூருக்கு 2 மைல் தூரத்தில் உள்ள பொன்னூர் மலை என்னும் ஒரு குன்றில் ஏவாசாரியார் என்பவரின் திருப் பாதம் இருக்கின் தது. இந்த எலாசாரியார் என்பவர் திருக் குறள் இயற்றிய திருவள்ளுவர் என்று சமணர்கள் கூறு கினார்கள். இந்த மலையில் பாதையில் அமைக்கப்பட்டுன்ன ஏலாசாரியரின் திருப்பாதத்திற்கு ஆண்டுதோறும் சமணர் கள் பூசை முதலிய சிறப்பு செய்து வருகிறார்கள். பொன் லூரைச் சுவர்ணபுரி என்றும் கூறுகிறார்கள். தேசூர் : வந்தவாசி தாலுகா, வந்தவாசிக்குத் தென் மேற்கு 10 மைல். இங்குச் சமணர் உள்ளனர். (Top. List. P. 170 , N. A. Dt. Manual P.215). தெள்ளாக : வந்தவாசியிலிருந்து தென் மேற்கு 8 மைலில் உள்ளது. இங்கு இரு சமணக் கோவில் உண்டு. (Tcp. List. P. 170). திரக்கோல் : வந்தவாசியிலிருந்து தென்மேற்கு 8} மைல். இங்குள்ள குன்றின் மேலே மூன்று சமணக் கோயில் சளும் மூன் - குகைகளும் உள்ள ன. (Top. List. P.170). வெண்தன்றம் : வந்தவாசிக்கு வடக்கே மூன்று மைல், இங்குச் சமணக் கோயில் உண்டு. (Top. List. P. 171). 4. தென் ஆர்க்காடு மாவட்டம் கீழ்க்குப்பம் : (கீழருக்குணம்) கூடலூர் நெல்லிக் குப்பம் சாலைகள் சேரும் இடத்தில் உள்ள இவ்வூரில், கிராமதேவனத அம்மன் கோவிலின் மேற்புறம் ஒரு சம ணர் திருவுருவம் காணப்படுகின்றது, செங்கல் சூளைக்காக பண்ணைத் தோண்டியபோது இது கிடைத்தது, வீற்றிருக் கும் சொலத் திடன் உள்ள இந்த உருவத்தின் தவக்கு மேல் குடையும், இருபக்கங்களிலும் சாமரை வீசுவது போன்ற இரண்டு உருவங்களும் உள்ளன." 1. South Arcos District Gazetteer, Val. I, P. 311.