பக்கம்:சமணமும் தமிழும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணத் திருப்பதிகள் 135) குடைந் தமைக்கப்பட்ட குகைக்கோயில் உண்டு, இச் கோயிலின் முன் மண்டபம் வடக்குத் தெற்காக 22 அடி 10 அங்குலம் நீளமும் 11 அடி அகலமும் உள்ளது. முன்புறத்தில் இரண்டு சுற்றூண்களையுடையது, தூண்கள் ஒவ்வொன்றும் 2 அடி 2 அங்குலம் சதுரமும் 6 அடி 10 அங்குலம் உயரமும் உள்ளன. இவை யாவும் ஒரே பாதையைக் குடைந்து அமைக்கப்பட்டன, இம் மண்ட பத்தின் வடபுதத்தின் சுவரை பொட்டி, முக்குடையுடன் விற்றிருக்கும் அருசக்கடவளின் திருவுருவமும் தென்புறச் சுவரையொட்டிப் பார்சவாதர் திருவுருவமும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேற்கரையிலும் தூண்களிலும் சுவர்களிலும் ஓவியங்கள் எழுதப்பட்டிருக் தன. இவ்வோவியங்கள் இப்போது சிதைந்து காணப்படு கின்றன, சிதைந்த சில பிலும் இவ்வோவியங்கள் மனதைக் சுமாக்கடியனவாக உள்ளன. இந்த மண்டபத்துக்கு நடுவில் பாறைபைக் குடைந்தமைக்கப்பெற்ற ஒரு சிறு கோவில் உண்டு. இதன் அகலமும் நீளமும் உயரமும் 101 அடி. இக்கோயிலின் வாயில் 5 அடி 7 அங்குலம் உயரமும் 21 அடி அகலமும் உள்ளது. இக்கோயிலில் அருகக்கடவுளின் மூன்று உருவங்கள் முக்குடையுடன் அமைக்கப்பட்டுள்ளன. இக் குகைக் கோயிலை அமைத்த வன் பேர்போன மகேந்திரவர்மன் 1 என்னும் பல்லவ அரசனாகும். இவன் கி. பி, 600 முதல் 630 வரையில் தொண்டைமண்டலம் சோழமண்டலங்களை அரசாண் டான், இவனுடைய உருவம் இக்குகைக் கோயிலில் ஓவியமாக அமைக்கப்பட்டுள்ளது. இக்குகைக் கோயிலுக்கு வடகீழ்ப்புறத்தில் இயற்கையாயமைந்த ஒரு குகை உனது. இக்குகைக்குள் 17 கற்படுக்கைகன் பாறையில் அமைக்கப் பட் சின்னன. இக்குகைக்கு ஏழடிப்பட்டம் என்னும் வறி பாகச் செல்லவேண்டும். இக்குகையில் முற்காலத்தில் சமணத் துறவிகள் தங்கியிருந்து தவஞ்செய்து வந்தனர். இங்கு, பிராமி எழுத்திலும் வட்டெழுத்திலும் சாசனங்கள் 1. Madras Ep. Rep, 1915. P. 86.