பக்கம்:சமணமும் தமிழும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வடக்கிருத்தல் 188 தவர் அல்லாதவர்களும் வடக்கிருந்து உயிர்விட்ட செய்தி சங்க நூல்களில் கூறப்படுகிறது. சேரமான் பெருஞ்சேரலாதனும் சோழன் கரிகாற் பெருவளத்தானும் வெண்ணிப் பறந்தலை என்னும் இடத் தில் போர் செய்தனர். அப்போரில் சேரமான் பெருஞ் சேரலா தன் முதுகில் புறப்புண் ஏற்பட்டது. புறப்புண் என்பது முதுகுப்புறத்தில் புண்படுதல், வீரர்கள், போரிடும் போது தமது மார்பில் புண்பட்டால் அதைப் பெருமையாகக் கருதுவார்கள். முதுகில் புண்பட்டால் அதை அவமானமாகக் கருதுவார்கள். தற்செயலாகப் போரிலே புறப்புண் ஏற்பட்டது பெருஞ்சேரலாதனுக்கு. அதனால் பெருங்கவலையடைந்தான்; நீராத்துயரம் ஏற் பட்டது. ஆகவே, அவன் உண்ணாவிரதம் இருந்து (வடக் கிருந்து) உயிர்விட்டான், இச்செய்தியைப் புறநானூறு 65, 66-ஆம் செய்யுள்களிலும் அவற்றின் உரையிலும் அறியலாம். உறையூரை அரசாண்ட கோப்பெருஞ்சோழன், தன் மக்கள் அரசரிமைக்காகக் கலகஞ் செய்ததைக் கண்டு சினங் கொண்டு அவர்கள் மேல் போர் செய்யச் சென்றான். அப் போது, புல்லாத்தார் எயிற்றியனார் என்னும் புலவர், அறி வில்லாத மக்கள் மேல் தந்தை போர் செய்வது தவறு என்று கூறித் தடுத்துவிட்டார். ஆனால், சோழன் தன் மக்களின் செயலுக்காக வருந்தி வடக்கிருந்து (உண்ணாவிரதம் இருந்து) உயிர்விட்டான். சோழனுடைய கண்பர் பிசிர் ஆர் தயார் என்னும் பலவர் தம் நண்பராகிய சோழன் உயிர்விடுவதைக் கண்டு மனம் பொருமல் தாமும் அவர் பக்கத்தில் அமர்ந்து வடக்கிருந்து உயிர் விட்டார், சோழ னுடைய மற்செரு நண்பரான பொத்தியார் என்பவரும் இச்செய்தியறிந்து மனம் வருந்தித் தாமும் வடக்கிருந்து உயிர்விட்டார். இச்செய்திகளைப் புறகானாறு 212 முதல் 223 வரையில் உள்ள செய்யுள்களால் அறியலாம். சிறுபஞ்சமூலம் என்னும் நூலிலேயும் வடக்கிருத்தல் கூறப்படுகிறது. செய்யுள்கள் இச்செம் இரு