பக்கம்:சமணமும் தமிழும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணசமயத்தில் மகளிர்தியை 187 செய்வார்களாயின் வீடுபேறு அடைவார்கள் என்றும் மேருமந்தர புராணம் கூறுகின்றது, "விரதசீ லத்தராகித் தானமெய்த் தவர்க்குச் செய்து அருகனைச் சாண மூழ்கி யான்றவர்ச் சிறப்பு செய்து கருதிசற் கணவற் பேணும் கற்புடை மாணிர் இந்த உருவத்தின் நீக்கி சற்பத் துத்தம் தேவர் ஆவார்.” மாதவர் தாக்கி வையத்து ஜயராய் வந்து தோன்றி எதமொன் றின்றி விடும் எய்துவர் தையலார்கள். இதே கருத்தைச் சீவகசிந்தாமணியும் கூறுகிறது. சீவகன் துறவு பூண்டபோது அவனுடன் துறவு பூண்ட அவனுடைய தேவிமார், வீடுபேறடைவதற்காகத் தவம் செய்யவில்லை. பெண் பிறப்பு நீங்கும்படியாகத் தவம் இருந்தனர். அந்தத் தலத்தின் பயனாக அவர்கள் மறு பிறப்பிலே தேவலோகத்திலே இந்திரர்களாக (ஆண்பிறவி பாகப்) பிறந்தார்கள் என்ற கூநப்படுகிறது, அச் செய்யுள் இது: ஆசை யாச்வமோ டைய மின்றியே ஓசை போய்கள் குண்ண சோற்றபின் ஏசு பெண்ணொழித் தீந்தி ரர்களாய்த் தூய ஞான மாய்த் தநக்கம் எய்தினார்."