பக்கம்:சமணமும் தமிழும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

190 சமணமும் தமிழும் வழங்கிவந்ததாகத் தெரிகிறது. (இந்த மலைகளைப்பற்றிய எனைய செய்திகளைச் ' சமணத் திருப்பதிகள் ' என்னும் அதிகாரத்தில் கூறியுள்னோம்.) இனி, சமணர் ஏழுகடல்களை அழைத்ததாகச் சொல் லப்படும் செய்தியை ஆராய்வோம். மதுனாக்கு அருகிலே மேட்டுப்பட்டி என்னும் ரொமத்துக்கு அருகில் சித்தர்மலை என்னும் ஒரு மலையுண்டு. கோடைக்கானல் போட்டு அம்மைகாயசனூர் இரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே பதின்மூன்று மைல் சென்முல் இக்கிராமத்தையடையலாம். மேட்டுப்பட்டியில் உள்ள இந்தச் சித்தர்மலையில் சமண முனிவர் இருந்த குகைகளும் கற்பாறையில் அமைக்கப் பட்ட கற்படுக்கைகளும் இன்றும் காணப்படுகின் தன. அன்றியும் இங்கு எழுகடல் எனப் பெயருடைய சுனை பொன்று உண்டு. பண்டைக்காலத்தில் இங்குச் சமண முனிவர் இருந்தபடியாலும் ஏழுகடல் என்னும் சுனை இருப்பதாலும் ஏழுகடல்களையும் ஓரிடத்தில் வரவழைத் துப் பாண்டியனுக்குக் காட்டினார்கள் என்ற இச்சதையைக் கற்பித்திருக்கக்கூடும். உறையூரை அழித்த செய்தியை காய்வோம். உறை பூரில் தொன்றுதொட்டுச் சமணர் இருந்துவந்தனர். இவ் வருக்குக்கருகிலுள்ள திருச்சிராப்பள்ளி மலைக்குகையிலும் பண்டைக்காலத்தில் சமண முனிவர் இருந்ததற்குச் சான்றுகள் உண்டு, சிலவேளைகளில் வெள்ளப்பெருக் சாலும் மண்காற்றினாலும் வேறு காரணங்களாலும் ஊர்கள் அழிந்து போவது இயற்கை. (இவ்வாறு அழிவண்ட ஊர்கள் சில இக்காலத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.) இந்த இயற்கைப்படி உறையூரும் மண்காற்றினால் அழிக் திருக்கக் கூடும். ஆனால், சமணர் மந்திரத்தினால் அழித் நார்கள் என்பது நம்பத்தக்கதன்று. இவ்வாதெல்லாம் சமணர்மீது சுமத்தப்பட்ட இக் கற்பனைக் கதைகள் நாளடைவில் சமணருக்குப் பெருமை 1. An. Rep. Arch. Dept S. Circle. 1910-1911. P. 50-51.