பக்கம்:சமணமும் தமிழும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

சமணமும் தமிழும்


கீழ்க்காணும் சித்திரம் சமணசமய தத்துவத்தை விளக்குகிறது. இந்தச் சித்திரத்திற்குச் சுவஸ்திகம் என்று பெயர், பிறவிச் சக்கரம் என்றும் கூறப்படும். உயிர்கள் தாம் செய்த புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி, தேவகதி விலங்குகதி நரககதி மனிதகதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து உழல்வதைக் குறிக்கிறது இது.

பிறவிச் சக்கரத்திற்கு மேலே உள்ள மூன்று புள்ளிகள் மும்மணிகளைக் குறிக்கின்றன, அஃதாவது நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்பவற்றைக் குறிக்கின்றன.

மூன்று புள்ளிகளுக்கு மேலே பிறைபோன்ற ஒரு கோடும் அக் கோட்டின் மேல் ஒற்றைப் புள்ளியும் காணப்படுதின்றன. இந்த ஒற்றைப் புள்ளி வினைகளை நீக்கி வீடு (மோக்ஷம்) அடைந்த உயிரைக் குறிக்கிறது, இந்தத் தத்துவக் குறிப்பைச் சமணர் இல்லங்களிலும் கோவில்களிலும் காணலாம்.