பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VIII



இந்து சமய தமிழ் இலக்கியங்களின் பெருக்கமும் வளமும் நம் எல்லோருக்கும் நன்கு தெரிந்ததே. ஆனால், சிறுபான்மை சமயங்களான சமணம், பெளத்தம், கிறிஸ்துவம் இஸ்லாம் ஆகிய சமயங்கள் தமிழுக்கு வளமான பணி ஆற்றியிருந்தும் அவை மக்களின் கவனததிலிருந்து ஓரளவு மறைந்தேயுளளன. எனவே, அவற்றை மீணடும் மக்களின் கவனத்துக்குக் கொண்டு வரவேணடும் என்ற விருப்பத் தின் விளைவே சமண பெளத்த, சிறித்தவ, இஸ்லாமியக் கருத்தரங்கு முயறசியும் அதன் பயனாக உருவான இத் தொகுப்பு நூலும்.

பலரது கவனத்தை ஈர்த்துச் சிந்திக்கத் தூண்டிய இக் கருத்தரங்கின் சிறப்பம்சம், இந்து சமயத்தைச் சார்ந்த டாக்டர் ச. வே. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கருததரங்கில், இஸ்லாமியரான கவிஞர் (முஹம்மது) மு. மேத்தா அவர்கள் 'சமண இலக்கியம்’ பற்றியும் கிறிஸ்தவரான பேராசிரியர் திரு வள்ளுவன் கிளாரன்ஸ் அவர்கள் 'பெளத்த இலக்கியம்' பற்றியும் டாக்டர் சிலமபொலி சு. செல்லப்பனார் அவர்கள் 'இஸ்லாமிய இலக்கியம் பற்றியும் டாகடர் க.ப. அறவாண்ன் அவர்கள் கிறிஸ்தவ இலக்கியம்' பற்றியும் ஆய்வுரை நிகழ்த்தியதாகும்.

ஒரு சமயததைச் சார்ந்தவர் மற்ற சமய இலக்கியங்களை விரும்பிப் படித்து, மனந்திறந்து பாராட்டும் நிலை உருவாவதன் மூலமே உண்மையான ஒருமைப்பாட்டை மக்கள் உள்ளங்களில் நிலைபெறச் செய்ய முடியும் என்ற கருததை செயலபடுத்துவதே இம்முயற்சி. இந்திய ஒருமைப்பாட்டையும் உலக ஒருமைப்பாட்டையும் உருவாக்கும் வகையில் தொடர்ந்து இலக்கியப் பயணத்தை மேற்கொணடுவரும் என முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக இக்கருததரங்கையும் அதன் விளைவாக உருவாகி தங்கள் கரங்களில் தவழும் இத்தொகுப்பு நூலையும் கருதுகிறேன்.

ஒவ்வொரு சமய அறிஞரும் மாற்றுமத இலக்கியத்திற்கு வக்காலத்து வாங்கி ஆய்வுரை வழங்கியது கருத்தரங்குப்