பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

புலவர்கள் பெயர்களையும், அவர்கள் படைத்த இலக்கியங்கள் பலவற்றைப்பற்றிய சுவையான குறிப்புகளையும் வழங்கியுள்ளார்கள்.

ஆனால், 'கிறிஸ்தவ இலக்கியம்' என்கிற தலைப்பில் வழங்கப்பட்டுள்ள கட்டுரையில் அதன் ஆசிரியர் தமிழில் கிறிஸ்தவ இலக்கியம் படைத்துள்ள கவிஞர் பெருமக்கள் பெயர்களையோ, அவ்விலக்கியத்திலிருந்து ஒரு பாடலையோ அல்லது பாடல் வரியையோ கூடக் குறிப்பிடவில்லை என்பது ஏமாற்றமளிப்பதாக உள்ளது.

ஐரோப்பியராகப் பிறக்க நேர்ந்த கிறிஸ்தவ அருட் தொண்டர்கள் இந்தியாவுக்கு வருகை தந்ததன் உள்நோக்கம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட கட்டுரையாளர் 23 பாதிரிமார்கள் சமயத்தைப் பரப்பும் பணியிலே ஈடுபட்டு அதற்குத் துணையாகத் தமிழைக் கைப்பற்றிக் கொண்டார்கள் என்று தான் குறிப்பிட்டுள்ளாரே தவிர அந்த 23 பாதிரிமார்களுக்குள்ளே ஒரு பாதிரியாவது எவ்வாறு தமிழை சமயப் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தினார் என்பதைக் குறிப்பிடவில்லை.

மேனாட்டுப் பாதிரிமார்களுள் ஒருவராகிய போப் அவர்கள் திருவாசகத்தை மொழிபெயர்த்தமைக்கு ஒருகாரணம் இகதகைய சிறந்த சமய இலக்கியத்தை ஆங்கில மக்கள் குறிப்பாகத தமிழகத்திற்கு அருட் பணியாளர்களாகச் செல்ல விரும்புகின்றவர்கள் முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். அதோடு, தமிழகத்திலுள்ள சமயங்களைப் பற்றிய குறைவான மதிப்பீடுகளை அவர்கள் தவிர்த்திட வேண்டும் என்ற நன்நோக்கோடு கூட அவர் அம்மொழிபெயர்ப்பினைச் செய்தார். இன்று கிறிஸ்தவ இலக்கியங்களுக்கு உள்நோக்கங்கள் எத்தனை வகையாகக் கற்பிக்கப்பட்டாலும், அவை அனைத்திற்கும் மேம்பட்ட பெருநோக்கம் ஒன்று இருப்பதை, மறைக்கவோ மறுக்கவோ எவராலும் முடியாது. எங்கெல்லாம்