பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45



“குவளை மேய்ந்த குடக்கட் சேதா
முலைபொழி தீம்பால் எழுதுக ளவிப்பக்
கன்று நினை குரல மன்றுவழிப் படர”

இன்னும் பலவித காட்சிகள். ஆங்காங்கே விளக்குகள் எரிகின்றன.

"அந்தி யந்தணர் செந்தீப் பேணப்

பைந்தொடி மகளிர் பலர்விளக் கெடுப்ப யாழோர் மருதத தின்னகரம் புளரக்

கோவலர் முல்லைக் குழன்மேற் கொள்ள"

இது போன்று பலபல எழிலோவியங்களை ‘மணிமேகலை’யில் காணலாம், சுவைக்காகச். சில உவமைகளைப் பார்ப்போம்.

இந்த உவமைகள் எடுத்துக்கூற வேண்டிய உவமைகள். ஏனென்றால் இவை தமிழ் இலக்கியங்களில் இருக்கின்ற உவமைகள் மட்டுமல்ல, உலக இலக்கியங்களிலும் நாடகங்களிலும். காவிய நாடகங்களிலும் காணக்கூடிய உவமைகளைப் போல, ஏன் அவற்றையும் விஞ்சும் அளவிற்கு ஒப்பரியவை.

வரும் பொருளைக் கூறுகின்ற ஒரு நிகழ்ச்சி என்ன நிகழும் என்று எதிர்பார்க்கின்ற ஒரு நிகழ்ச்சி. மாதவியானவள் மணிமேகலைக்குத் தன் கணவன் இறந்த செய்தியைக் கூறுகின்றாள். மணிமேகலை மலர்தொடுத்துக் கொண்டு இருக்கின்றாள். கண்ணீர் விட்டு விடுகின்றாள். மலரானது நனைந்து விடுகின்றது. இது ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றது. ஏனென்றால் இது,

"மாமலர் நாற்றம் போல மணிமேகலைக்கு" ஏது நிகழ்ச்சியாக இருக்கிறது.