பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46



மலரை நாம் பார்க்கவில்லை, வாசனை வீசுகிறது, பிறகு மலரைக் காண்கின்றோம். இது வரும் பொருள் நிகழ்ச்சி என்று கூறுகின்றார். பெளத்த வழக்கிலே வினைப்பயன் வருதலை அறிவிக்கும் நிகழ்ச்சி. உடனே மணிமேகலை அழுகின்றாள். மாதவி தன் கையால் துடைக்கிறாள். மாதவியின் கரம் தாமரை அதாவது மணிமேகலையின முகம் தணமதி தாமரை தண்மதி சேர்ந்தது போல உள்ளது. இன்னும் இரண்டு உதாரணங்கள் மட்டும கொடுக்க நான் விரும்புகின்றேன். ஒன்று மிக அருமையான ஓர் உவமை. அதாவது மணிபல்லவத்திற்குச் சென்று விடுகிறாள் மணிமேகலை. அங்கே புத்த பீடிகையைக் காண்கின்றாள். வலம் வருகின்றாள். தலை மேல் கைவைத்து வணங்குகின்றாள், பார்த்தவுடனே பக்தி மிகுதியால் சடாரென்று விழுந்து விடுகின்றாள். அவளது மெல்லிய இடை ஒடிந்து விழுவது போல் உள்ள காட்சியை இயற்கைக் காட்சியோடு மேலும் அழகுபடக் கூறுகின்றார் சாத்தனார். அவளுடைய இடையானது மின்னலிடைபோல் நுண்ணியதாக இருக்கின்றது. இந்த இடையானது திடீரெனறு ஒடிந்து விடுகின்றது. இது எவ்வாறு இருக்கிறதென்றால் மேகத்திலே மின்னல் தோன்றுகிறது. மின்னல் தோன்றும் பொழுது, இடி விழுகின்ற இடியோசை கேட்கின்றது. ஒளியும் ஒலியும் ஒரே நேரத்தில் கேட்கும் எனறால், மேகமானது தாழ்ந்ததாக இருக்க வேண்டும் அப்படிப்பட்ட தாழ்ந்திருக்கிற ஒரு மேகத்திடமிருந்து மின்னலும் இடியும் ஒன்றாகத் தோன்றும், அந்த நேரத்தில மின்னலுடனும் இடியுடனும் மேகமே ஒடிந்து விழும் போல் இருக்கிறது என்கிறார் சாத்தனார் அவர்கள் நன்றாகப் பாருங்கள்.

' கொடிமின் முகிலொடு நிலஞ்சேர்ந்தென்ன
இறுநுசுப் பலச வெறுநிலஞ் சேர்ந்தாங்கு'

இறுநுசுப்பு-ஒடிந்து விழுவது போன்ற மின்னலிடை கீழே விழுந்து விடுகின்றாள் மின்னலிடை மின்னல் போல் வளைவது, இடை ஒடிந்து விழுவது போல் அவள்