பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

79 கண்டுபிடிக்க, ஆராய்ச்சி செய்ய, புதிய முயற்சி செய்ய, திருத்தம் தர, இந்த விதியெனும் தத்துவம், மனிதனை விடுவதில்லை. எவ்வளவோ பாடுபட்டோம் கடைசியில் பலிக்கவில்லை - நமது விதி அப்படி என்று எண்ணி சங்க வைக்கிறது. அவனுடைய திறமையும் தூங்க ஆரம்பிக் கிறது,சுயரம் எழுகிறது, அப்போது துதிக்கிறான்;ஏக்கம் பிறக்கிறது. அப்போது புராண, இதிகாச ஏடுகளிலிருந்து அவனுக்குக் கதைகள் படித்துக் காட்டப்படுகிறது. இந்த விதியை வெல்ல அல்லது முன் கூட்டியே தெரிந்துகொள்ள, மாற்ற, திருத்த, ஏதாவது செய்யலாமா என்ற ஆசை கிளம்பலாயிற்று.அதனைப் பூசாரிகள், சோதி டர்கள், மாந்திரீகர்கள் என்போர் பயன்படுத்திக் கொண்ட னர், அவர்கள் வாழ்வு நடாத்த பிறகு அவர்கள் அந்த வாழ்விலே கிடைக்கும் சுகத்தை இழக்க மனமின்றி விதியை மக்கள் நம்புவதற்காக. மேலும் மேலும் கற்பனைக் கதை களைக் கட்டிவிடலாயினர். கடவுளின் மீது ஆணையிட்டு எதையும் பேசினர் - ஏழை ஏமாளியானான். - விதியை மதியால் வெல்லலாம் என்று று வீம்பு பேசும் மனிதர்காள்! நான்முகன் ஒரு சிரம் இழந்தது எதனால்? விதியால் அவர் நான்மறை தந்தவராயிற்றே,அவரால் முடிந்ததா விதியைத் தடுக்க ? அவர் பிச்சை எடுத்தார். கையில் சிரத்தைக் கொண்டு என்று கதைகள் கட்டினர். வழுக்கு நிலத்தில் தவறிக் கீழேவீழ்ந்து கால் முறிந்தவன், மீண்டும் அந்த வழுக்கு நிலத்திலே ஆரம்பித்து மறுபடியும் மறுபடியும் வீழ்வது போலாயினர் பாமர மக்கள். ஆனால் உலகிலே மிகமிகச் சிறு தொகையினர்- பேரறி ஞர்கள் - சீர்திருத்தக் கருத்தினர் - உலகைத் திருத்தும் உத்தமர்கள். சித்தததைச் சிறையிட மறுத்தனர். சிந்திக் கத் தொடங்கினர் புத்தம் புதிய உண்மைகளைக் கண் டறிந்து கூறினர். உலகின் உருவம், இயல்பு, எண்ணம். ஏற்பாடு எல்லாம் மாற ஆரம்பித்தன. தட்டை உலகு, உருண்டை ஆயிற்று, மேல் ஏழு, கீழ் ஏழு லோகம் என் பது வெறும் கட்டுக்கதை என்பது விளங்கலாயிற்று. சூரிய - சந்திர தேவன். இந்திர தேவன், வாயு, வருணன்.