பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

t 90 கவனித்துக் கொள்வர்: ஸ்தாபனங்களிலும் இதுபோலத் தான், தொழிற் ஸ்தாபனங்களின் ஐக்கியமும் பலமும் கம்பிறையும் கெடாதிருக்க வேண்டுமானால், ஜன்னல் ஜாக்கிரதையுடன் கவனிக்கும் மாளிகைக்காரர்போல், ஸ்தா பனத்தின் சகல உறுப்பினரையும் கவனித்து, கட்டுக் கோப்பு கெடாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். இந்த முறையைக் கவனியாததால், தொழிலாளர் ஸ்தாபனங் களிலே. ஒற்றுமைக்குறைவு ஏற்பட்டு சிதறிவிட்டதுண்டு. பெரிய மரங்களை மானிகை மண்டபத்துக்குத் தூண் களாக அமைத்துவிட்டால் மட்டும் போதாது. மிக மிகச் சாதாரண செல், மரத்திலே சிறு துளைகளிலே புகுந்து கொள்ளாதபடியும் பார்த்துக்கொள்ள வேண்டும் - செல் அரிக்க ஆரம்பித்தால் செம்மரமும் சரி,எம்மரமும் சரி. கெடும் - அதனுடன் ஸ்தாபனமும் கெடும். தாங்கும் சக்தி தாக்கும் சக்தி இரண்டும் ஒரு சேர ஒரு ஸ்தாபனத்துக்குத் தேவை. அதற்கேற்ற வகையிலே அந்த அமைப்பு இருக்க வேண்டும் - இருக்கவேண்டுமானால், இருவகை சக்திகளையும் திரட்டவும், திரட்டியதை உபயோகிக்கவும், ஏற்ற தகுதி படைத்தவர்கள் ஸ்தாபனத்தில் இருக்கவேண்டும். ஒருவர் இருப்பது மற்றவருக்கு வலிவு. என்ற எண்ணம் குன்றாது, குறையாது இருக்கவேண்டும். அந்த எண்ணத்தாலேயே ஸ்தாபனத்தின் ஐக்கியத்தைக் குன்றாமல் காப்பாற்ற மூடியும். கொள்கைகள், நிலைமைகளால் மாற்றமடையும் போது, ஸ்தாபன ஐக்கியத்துக்கு ஆபத்து நேரிடக்கூடும். அதுபோலவே, ஸ்தாபனத்தில் நடைமுறையின், எதைச் செய்வது, எது எப்படிச் செய்யப்படவேண்டும், யார் என்ற பிரச்சினைகள் இளம்பி, அதன் பயனாக ஸ் ஸ்தாபன ஐக்கியம் கெடுவதுண்டு. ஆனால், அடிப்படை பலமாக இருந்தால் மாளிகை கெடாதிருப்பது போலக், கொள்கை பலமிருந்தால் ஸ்தாபனம் கெடாது. ஆனால் அதற்காக