பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.சா. 69

இன்பம் பெருக்கி இருள் அகற்றி எஞ்ஞான்றும் துன்பம் தொடர்வு அறுத்துச் சோதியாய் அன்பமைத்துச் சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊராகக் கொண்டான் உவந்து.

-திருவெண்பா : 1.1.

மாணிக்கவாசகர் இம்மண்ணுலகில் உயிர்கள் எடுக்கும் பல்வேறு பிறப்புக்களைக் கழிவிரக்கத்தோடு, உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் பக்குவ நிலையோடு குறிப் பிடுகின்றார்:

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்; எம்பெருமான்

-சிவபுராணம் : 26-31

என்று பிறவிப் பிணியின் புன்மையினைக் கூறி, அப்பிணி போக்கும் மாமருந்து சிவனின் திருவடிகளே என்பதைத் தெரிவிக்கும் வகையில்,

மெய்யே உன்பொன் அடிகள்

கண்டுஇன்று வீடு உற்றேன்

எனப் புகல்கின்றார். புறத்தார்க்குச் சேயோனாய், நேயத்தே நின்ற நிமலனாய், மாயப் பிறப்பு அறுக்கும் மன்னவனாய், ஆராத இன்பம் அருளும் மலை யாய்" "மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடராய், "அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவாய் விளங்கும் சிவபெருமானே இவ்வுலகின் உண்மைத்

சி.-5