பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

யிருப்பார்களா? சீனாவிலே சென்ற ஆண்டு சியாங்கெய் 'ஷேக் -- இன்று மாசேதுங்!

பிரிட்டிஷாரின் செல்வப்பிள்ளை, அமெரிக்காவுக்கு மிசுமிக வேண்டியவர், அதிகமாக டாலர் உதவிபெற்றவர், அசகாயசூரர் -- சியாங்கெய்ஷேக் இன்று பார்மோஸா தீவிலே ஒளிந்துகொண்டிருக்கும் நிலை வருவானேன்?

பயங்கரமான பலம்படைத்தவர் படேல் என்று கூறுகிறார்கள், ஆனால் பத்திரிகைகளிலே பார்த்தால் அவர் முகத்திலே சோகக் காட்சியைக் காணலாம். பண்டித ஜவகர்லால் நேரு முகத்திலே அதிகமாக முதுமை இருப்பதைக் காணலாம். இவர்கள் பலம் என்னவாயிலும், சியாங்கெஷேக் -- இன்று பலமின்றி பார்மோஸா தீவிலே பதுங்கிக்கிடக்கிறார். அதனால்தான் நம் ஆளவந்தாருக்கு நாம் எச்சரிக்கை செய்கிறோம். என்ன எச்சரிக்கை?

பார்முழுதும் புரட்சித்தீ பிடிக்கா முன்னர் திருத்திக்கொள்ளுங்கள். நம் சர்க்கார், நம்முடைய தோழர்களால் நடத்தப்படும் சர்க்கார். இதனை ஆகவேதான் திருத்திக்கொள்னும்படி எச்சரிக்கிறோம். மக்கள் நிளைத்தால் மாற்றியமைக்க முடியும்.

இந்தியாவில் மேல்காட்டு மூலதனம் கோடிக்கணக்து குலிந்து கொண்டிருக்கிறது. டில்லியில் ஹிந்து பத்திரிக்கையின் நிருபராக இருக்கும் தோழர் சிவரராவ் நகைச்சுவையாகச் சொல்லுகிறார் "பண்டித நேரு அமெரிக்காவுக்குக் கருப்பு யானைகளை அனுப்புகிறார். அதற்குப் பதிலாக, அமெரிக்கா இந்தியாவுக்கு வெள்ளையானைகளை அனுப்புகிறது” என்று, தோழர் சிவராவ் வெள்ளையானையென்று கூறுவது அமெரிக்க டாலர்களைத்தான்.

சுதந்திரம் பெற்றவுடனே கடன்வாங்கும் நிலை சர்க்காருக்கு ஏற்பட்டது. இந்தியாவுக்குக் கடன் தரலாமா என்பதை விசாரித்தரிய 14 அமெரிக்கர் கொண்ட தூது கோஷ்டியொன்று இந்தியாவுக்கு வந்தது. அவர்கள்