பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

தாஜ்மகாலைக் கண்டு களிக்க வரவில்லை ! ஹிமாலய மலையின் உயரத்தைக் கண்டு வியக்க வரவில்லை! கங்கையில்மூழ் க வரவில்லை ! காவேரியில் நீராட வரவில்லை! அவர்கள் வந்தது, இந்தியாவில் எவ்வளவு பொன் இருக்கிறது? தேயிலைத் தோட்டங்கள் எவ்வளவு இருக்கின்றன? தொழில் வளர்ச்சி எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது? என்பதையெல்லாம் தெரிந்து செல்லத்தான்.

தங்கச் சுரங்கத்தையும், காபி-தேயிலைத் தோட்டத்தையும் பார்வையிட்ட பின்தான் அவர்கள் கடன்தரத் துணிந்தார்கள். நம்முடைய சர்க்கார் அயல் நாட்டாரிடம் கடன் வாங்கும் நிலையில் இருந்தால் தொழிலாளர் வளம் எப்படி உயரும்? நேரு அமெரிக்காவுக்குச் சென்ற பொழுது நெருவுக்கு அமெரிக்காவில் அமோகமான வரவேற்பு அளித்திருப்பதைப் பத்திரிகைகளிலே உள்ள படங்கள் வாயிலாக நீக்கள் சுண்டிருக்கலாம். அவருக்கு அமெரிக்க துரைமார்கள் கொடுத்த வரவேற்பை, ஒட்டலில் உட்கார்ந்துகொண்டு -- துளிர் வெற்றிலையைச் சுவைத்துக்கொண்டே தினமணி பத்திரிகையில் படிக்கும் பொழுது, எம்முடைய காங்கிரஸ் தோழர்களுக்கு உள்ளத்திலே ஒரு பூரிப்பு! நேருவைப் போன்று வேறு யாருக்கும் அமோகமான வரவேற்பு நடக்காதென்பது அவர்கள் முடிவு. இன்று லியாகத்அலிகான் அமெரிக்கா சென்றிருக்கிறார். அவருக்கும்தான் டாக்டர் பட்டம் தரப்படுகிறது. அவருக்குத்தான் அமோகமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன தெரியுமா? நம் நாட்டிலே மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றவர்கள் யார் யாரோ அவர்களையெல்லாம் வரவேற்றால்தானே அமெரிக்கர்கள் காரியத்தைச் சாதிக்க முடியும்?

ஆப்பிரிக்காவிலிருந்து அதன் தலைவர் சென்றாலும், ஈரானிலிருந்து ஷா சென்றாலும் இதே வாவேற்பு அளிக்கப்படும். நம்முடைய நாட்டிலே சங்கராச்சாரி தங்கப் பல்லக்கிலே சென்றால் இதைவிட சிறிது அதிகமாகவே வரவேற்பு இருக்கும்.