பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

எனக்கு முன்னர் பேசிய கவி ஹரீந்திரநாத் அழகாகக் குறிப்பிட்டார். ”இந்தியா அமெரிக்க முகாமில் சேர முயல்கிறது. அது தவறு. அவ்வாறு செய்ய முயலாதீர்கள்" என்றார் கவிஞர். ரஷிபா முகாமில் இந்தியா சேர வேண்டுமென்பது அவர் கருத்தல்ல.

மணிமுடி தரித்த மன்னர்கள், குருமார்கள், மடாதிபதிகள், ஜீயர்கள், தம்பிரான்கள் முதலியோரால் ஒரு நாட்டின் முற்போக்கு தடைபடுகிறது.

"ஓடும் செம்பொன்னும் ஒக்கநோக்குவர்" என்று ஒரு வாசகம் உண்டு. கையிலே வைாமோதிரம், காதிலே அழகிய குண்டலம், பாதத்திலே பொன்னாலான பாதகுறடு அணிந்திருக்கும் திருவாவடுதுரை தம்பிரான்களிடம் சென்று ஒரு கையில் சிறிது மாற்றுக் குறைந்த தங்கத்தையும் மற்றொரு கையில் செம்பும் கொடுங்கள். அவர் தங்கத்தையும் செம்பையும் உரை சுல்லில் உரைத்துப் பார்த்து ”இது சிறிது மாற்றுக் குறைந்து தங்கம் இது செம்பு" என்றே சொல்வார், தம்பிரானார் செம்பொன்னையும் ஓட்டையும் எப்படி ஒக்கநோக்குவார்?

ஹைதராபாத்து நிஜாம், பரோடா மன்னர், முடியிழந்தும் பதவியை இழக்காத பவநகர், பாரிசில் சிற்றரசர்கள் — ஆகியோரெல்லாம் இன்னும் எக்காளமிட்டுச் கொண்டுதான் இருக்கிறார்கள். ஜமீன்தாரர்களுக்குப் பெரும்பொருளை நஷட ஈடாகத்தந்து புதிய பணக்காரர்.களை சர்க்கார் உற்பத்தி செய்திருக்கிறார்கள். கனம் பக்தவத்சலனார் ஆயிரங்கால் மண்டபங்களிலே பள்ளிகள் அமைக்க வேண்டுமென்கிறார். காரணம் என்ன?

மந்திரி பக்தவத்சலனார் முற்போக்கு நோக்கத்தோடு இந்த செய்தியைக் குறிப்பிட்டாரென்ற எண்ணுகிறீர்கள்? பள்ளிகளைக் கட்டுவதற்கு வேண்டிய பணமில்லையே என்ற பஞ்சபுத்தியால்தான் மந்திரியார் இதைக் கூறுகிறார்.