பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

பஞ்சாங்கமில்லாத வீடுகளை நீங்கள் காண முடியாது.

நாள் பார்க்காத மக்களை நீங்கள் பார்க்க முடியாது.

சகுனம் கேட்காத ஜென்மங்களை நீங்கள் காண்பது அரிது.

மார்கழித் திருநாள் கொண்டாடாத மக்கள் மிகமிகக் குறைவு

சித்திரா பௌர்ணமிக்குப் பொங்கலிட்டுப் படைக்காத வீடுகளை நீங்கள் பார்க்கமுடியாது.

பஞ்சாங்கம் பார்க்கும் பழைய புத்தி அடியோடு ஒழிந்தாலொழிய மக்கள் பகுத்தறிவைப் பெறமுடியாது.

சொக்கநாதர், அரங்கநாதர், மீனாட்சி, காமாட்சி, கோயில்கள் இன்னும் இருக்கின்றன. இவைகள் குறைந்தால்தான் நாடு முன்னேறும். நாட்டிலே நல்லறிவு ஏற்படத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடுகிறது. நம்முடைய கழகத்தின் அடிப்படைக் கொள்கை நாட்டிலே கல்லறிவைப் புகுத்துவதுதான். நாட்டிலே நல்லறிவு பரவினால்தான் அடிப்படை பலமாக இருக்கும்.

பலாத்காரத்திலோ, நாசவேலையிலோ நாம் என்றும் ஈடுபட்டதில்லை! இனி ஈடுபடும் நோக்கமும் நமக்கு இல்லை! 1942-ல் இரயிலைக் கவிழ்த்ததைப் போல நமக்குக் கவிழ்க்கத் தெரியும், தந்திக் கம்பிகளை அறுக்கத்தெரியும். இதைச் செய்வது மிகவும் சுலபம். இதைச் செய்வதற்கு வேண்டிய சக்தியும் நம்மிடம் இல்லாமலில்லை. இந்த அழிவுச் சக்தியிலே நமக்கு விருப்பமில்லை என்று பல இடங்களிலே சொல்லியிருக்கிறேன்.

நடு இரவு 12-மணிக்குமேல் கொஞ்சம் தூக்கம் வராமல் இருக்கவேண்டும். கையிலே, ஒரு சுத்தியும் ஒரு பேனாக்கத்தியும், நெஞ்சலே கொஞ்சம் துணிவும்,