பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

எல்லோரும் இந்நாட்டு மன்னர் -- ஆம்! எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று கூறும் சர்க்கார், அபேத வாதத்திலே அதின் நம்பிக்கை கொண்டுள்ள நேரு சர்க்கார், முதலாளிகளை விடுவதில்லை. முதலாளிகளோ லாபத்தை விடுவதில்லை. முன்பு ஒரு கூட்டத்தில் முதலாளிகளைப்பற்றி நேரு கூறியதை உங்கள் நினைவுக்குக் கொண்டுவருகிறேன்:

"முதலாளிகள் லாபத்தை விடுவது இயலாத காரியம். ஆகலால் முதலாளிகள் லாபநோக்கத்தை விட்டுவிட வேண்டுமென்று நான் கூறவில்லை! முதலாளிகளுக்கு வரும் வாபத்திலே முதலாளிகள் விரும்பும் தொகையை சர்க்காருக்குத் தரவேண்டும்" என்று கூறினார். குறள், சாத்திரம், இதிகாசம், இவற்றில் கூறியவைகளையே அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லையே! இவர் கூறியவற்றையா எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்! எடுத்துக்கொள்ளாதது மட்டுமல்ல. நேரு தங்கள் பக்கம் திரும்பிவருகிறார் என்று முதலாளிகள் கூறவுந்தொடங்கிவிட்டார்கள்.

"புதிய தொழில்களை உற்பத்தி செய்வதற்குத் தக்க நிபுணர்கள் எங்களிடம் இல்லை" என்று நேரு சர்க்கார் சார்பாக படேல் கூறுகிறார். அமெரிக்கர்கள் இந்த செய்தியைப் பார்த்து கும்மாளம் போடுவார்கள். பாட்டாளிகள் பதைபதைக்க அமெரிக்க முதலாளிகள் பூரிப்பெய்த, ”திறமையில்லை, நிபுணர்கள் இல்லை" என்று கூறுகிறார் படேல்! "புதிய தொழில்களை உற்பத்தி செய்வதற்கு வேண்டிய பணமில்லை! என்கிறார் நேரு புதிய தொழிலை உற்பத்தி செய்வதற்கு வேண்டிய நேரம் இல்லை என்கிறார் முகர்ஜி, புதிய தொழில்களை உற்நத்தி செய்வதற்கு ஒன்றும் அவசியமில்லை! தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்வோம்!" என்கிறார் காமராஜர்.

நம் நாட்டிலே உண்மையில் திறமைசாலிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை, தோழர் அம்பேத்காரை