பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

வே இருக்கிறது இமயமும் குமரியும், இமயமுதல் குமரி வரை அவர்கள் சுரண்டும் தொழிலைச் செய்யலாம். இன்றுள்ள சர்க்கார் முதலாளிகளின் முன்னோடும் பிள்ளையாக இருப்பது வெட்கப்படக்கூடிய விஷயமாகும். சர்க்கார் முதலாளிமார்களிடம் போட்டியிடப் பயப்படுகிறது. சர்க்கார் போட்டியிட அஞ்சுவதை மறைக்க வேறு பார்க்கிறது. மறைப்பதால் புண்புரையோடி விடுமே தவிர புண் ஆறிவிடாது. டெலிபோன் நமக்கு நல்லகாரியத்திற்குப் யன்படுகிறது. அதே சமயத்தில் தீய செயல்களுக்கும் பயன்படுகிறது. ஒரு விதத்திலே பார்ந்தால் துப்பாக்கிக் தொடுமையைவிட டெலிபோன் மிகமிகக்கொடியது. டெலிபோன் மூலம் ஒரு முதலாளி வார்த்தை கூறினால் போதும்! முதலாளிக்கு முதலாளி ஏராளமான லாபம் கிடைக்கும்; ஆனால் ஆயிரக் கணக்கான மக்கள் இந்த ஒரு வார்த்தையால் சாகிறார்கள். பிளாக் மார்க்கெட் உச்சநிலையை அடைந்தது டெலிபோன்கள் மூலம்தான். இன்றுகூட வியாபாரி நினைத்தால் டெலிபோன் மூலம் விலையை ஏற்றிவிடலாம். முன்பெல்லாம் நமக்கு ஜாவா சர்க்கரை என்ன விலைக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது தெரியுமா? 6 அணா விலைக்குக் கிடைத்தது. உத்திரப் பிரதேசத்தில் உற்பத்தியைப் பெருக்க வேண்டுமென்பதற்காக ஜாவா சர்க்கரையின் இறக்குமதி நிறுத்தப்பட்டது. முன்பு 6 அணாவுக்குக் கிடைத்த சர்க்க்கரையை ஒண்ணரை ரூபாய் கொடுத்து உத்திரப் பிரதேசத்தில் உற்பத்தியாகும் சர்க்கரை வாங்கு என்று சர்க்கார் நமக்கு உத்தரவிட்டது, ரூபாய் ஒன்றரை ஏன்? ரூபாய் இரண்டரை கொடுத்தாலும் சர்க்க்கரைக்குத் திண்டாட்டமா யிருக்கிறதே யென்று கூறினால், கருப்பட்டி போட்டுக்கொள் என்றுதானே சர்க்கார் கூறுகிறது!