பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

சர்க்கார் நாட்டைக் காடாக்குகிறது. ஆனால், அவர்கள் காட்டை நாடாக்க வேண்டும். அதைச் செய்கிறதா நம் சர்க்கார்? நாடு காடாகும் நிலையை வளரவிடக்கூடாது. நாடு காடானால் மக்கள் உரிமை உணர்ச்சி நிச்சயமாக வளரும். கவிஞரும், நாமும் உரிமை உணர்ச்சியோடு சொல்வதை யெல்லாம் -- சர்க்கார் -- கேட்பார்களா? கவிஞர் பேசிய பேச்செல்லாம் சர்க்காருக்குக் கேட்கும் என்றா எண்ணுகிறீர்கள்?

ராஜாஜிக்குத்தான் கேளாக்காது. தனம் குமாரசாமி ராஜாவுக்குக் கேளாக்காதில்லை. இந்த சர்க்கார் நாம் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டும்.

கவிஞர் பேசும்பொழுது குறிப்பிட்டார், எல்லாவற்றிற்கும் ஒரே பழிச்சொல் சொல்கிறார்களென்று. மாஸ்கோ கூலீகள், துரோகிகள், கம்யூனிஸ்டுகள் என்ற ஒரே பழியைக் கூறி நாட்டிலே ஏற்பட்டுள்ள சுதந்திரக் கிளாச்சியை சர்க்கார் கொடுமையாக அடக்கப்பார்க்கிறது. நம்முடைய காங்கிரஸ் தோழர்கள் ஒருகாலத்திலே நம்மை தேசத் துரோகிகள் கம்யூனிஸ்டுகள் என்றார்கள். இப்பொழுது நம்மை கம்யூனிஸ்ட்கள் அல்ல என்றாலும் — கருங் கம்யூனிஸ்டுகள் (Black Communist) என்று சொல்லுகிறார்கள். அகராதியில் (Black Cormmunist) என்ற ஒரு புதிய பதம் சேர்க்கப்படுவதற்காக நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

பொதுவுடைமைத் தத்துவத்துக்கும், நம்முடை கழகக் கொள்கைக்கும் அதிக வித்தியாசம் இல்லை கம்யூனிஸ்ட்கள் பொருளாதாரத் துறையில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் சமுதாயத் துறையிலே நாட்டம் செலுத்துவதில்லை. சமுதாயத்துறையிலே, சமூக சீர்திருத்தத்திலே முதலில் நாட்டம் செலுத்திய பின்னர் தான் பொருளாதாரத் துறையிலே சர்க்காரிடம் போரிட வேண்டுமென்மன்பது நம் விருப்பம், அப்போதுதான் வெற்"றியும் எளிதில் கிடைக்கும். கம்யூனிஸ்ட்களுக்கு ஏழை —