பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டம்பாச்சாரி விலாசம் தமிழில் மண் நடகங்கள் கரம். ஆததமும் வரலாற்தமிழில் நா வருதுகள் தமிழில் நாடகங்கள் எப்போது தோன்றின?. எப் படித் தோன்றின? இந்தக் கேள்விகள் சிலருக்கு, அவசிய மற்றவையாக, ஏன்-அர்த்தமற்றவையாகக்கூடப் பட லாம். ஆனால் இன்றைய இலக்கிய விமர்சகர்களுக்கு இவை. அர்த்தமும் அவசியமும் உள்ளவை தான். ஏனெ னில் தமிழில் நாடக வரலாற்றை எழுத முற்படுகின்ற பலரும் தொன்றுதொட்டே, தமிழில் நாடகங்கள் இருத் திருக்கின்றன என்றே இன்னமும் கூறிவருகிறார்கள். இப்படிப் பட்டவர்களுக்குத்தான் இந்தக் கேள்விகள் அவசியமற்றவையாகவோ அர்த்தமற்றவையாகவோ' பட லாம். சரி, இவர்கள் கூற்றுத்தான் என்ன? அதை நாம் சிறிதே விசாரணை செய்யலாம். தமிழ் இலக்கியம் ஆதிமுதலே இயல் இசை நாடகம் என்ற முப்பெரும் பகுதிகளாகவே இருந்து வந்துள்ளது என்பது இவர்கள் வாதம். இந்த வாதத்தின் அடிப்படையில் இவர்கள் நமக்குப் பல சான்றுகளையும் தர முன்வரு கிறார்கள். தமிழின் ஆகத் தொன்மையான தொல் காப்பியமே 'நாடக வழக்கு பற்றிப் பேசுகிறது. பட்டினப் பாலை, பெரும்பாணாற்றுப்படை முதலிய சங்க நூல்கள்

  • நாடக மகளிரைப் பற்றிப் பேசுகின்றன; தமிழின்