பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 எனவே இவர் 1872-க்குப் பின்னர் தான் காலமாகிaருக்க வேண்டும். ஆனால் எந்த ஆண்டு என்பது நிச்சயமாகத் தெரிய வில்லை. இவர் தம் வாழ்நாட் காலத்தில் 'டம்பாச்சாரி விலாச' தவிர வேறு சில நாடகங்களும் எழுதினார் என்பதை இந்தக் குறிப்பும், இவரது நூலில் காணப்படும் குறிப்புக்களும் உறுதிப்படுத்துகின்றன. இவர் எழுதிய நாடகங்கள் அனைத்திலும் இவரது சிர்திருத்தக் கோள் கைகள் இடம்பெற்றிருந்தன. இவர் எழுதிய “தாசில்தார் விலாசம்' என்ற நாடகம் உயர்ந்த உத்தியோகஸ்தர்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பதாகும்.

  • பிரமசமாஜ நாடகம்” இவரது பிரம்ம சமாஜக் கொள்கை

களைப் பிரசாரம் செய்தும், இந்து சமயத்தில் புகுந்துவிட்ட குருட்டு நம்பிக்கைகளையும், முடப் பழக்க வழக்கங்களையும் சிண்டல் செய்தும், கிறிஸ்தவ சமயத்தாரை எதிர்த்துச் சாடியும் எழுதப்பட்ட நாடகம் ஆகும். பிரம்மஞானத்தில் இவருக்குள்ள பற்று தலையும் ஈடுபாட்டையும் நாம் “டம்பாச் சாரி விலாசத்திலேயே காணமுடியும். டம்பாச்சாரி விலாசத் தில் இறுதிப் பகுதியில் இடம்பெறும் அப்பர் சுவாமிகள் என்பவர் செய்யும் நல்லுபதேசத்தில் பிரம்மஞானக் கருதி துக்கள் இடம் பெற்றுள் ளன. டம்பாச்சாரி விலாசம் உண்டு கொழுத்து உறங்கிய செல்வந்தர்கள் எவ்வாறு குடியிலும் கூத்திமாரிடத்திலும் பொழுதைப் போக்கி, ஆடம்பரமாக வாழ்ந்து சீர்கெட்டலைந்தார்கள் என்பதை அம்பலப்படுத்து கின்ற நூல் தான், இதே விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு, நூலாசிரியர் “கூலிக்கு மாரடிக்கும் கூத்தாடிச்சி நடிப்பு' எனவும் ஒரு நூல் எழுதினார். ஆனால் அவர் எழுதிய அத்தனை நூல்களிலும் மேம்பட்டு நிற்பதும், அவருக்குப் புகழ் தேடித் தந்திருப்பதும், தமிழ் நாடக வர லாற்றில் இடம் பெறும் தகுதி பெற்றதும் அவரது 'டம்பாச்சாரி விலாசம்' ஒன்றுதான்.