பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 என்று பாடி, முடிக்கிறார்கள், பிறகு பரத்தையர் கண்ணியும் தொடர்கிறது. இவ்வளவுக்கும் பின்னர் தான் டம்பனின் மனம் திருப்தியடைகிறது. அவனது வாழ்க்கைத் தத்துவ மல்லவா பாட்டாக ஒலிக்கிறது!' உடனே அவன் தன் சட்டுவாஜியை அழைத்து அவர்களுக்கெல்லாம் தலைக்குப் பத்து ரூபாய் வீதம் சன்மானம் அளிக்கச் சொல்கிறான். பண்டாரங்கள் மகிழ்ந்து போகிறார்கள். நாய் விற்ற காசு குரைக்கலா செய்யும்? அட்டமத்துச்சணீ திருவொற்றியூரிலிருந்து திரும்பி வந்த டம்பனுக்கு, கும்பகோண ஐயர் பார்த்த ஆரூடம் பலிக்கத் தொடங்கு கிறது. சென்னைக்கு வந்த நாள் முதல் அவனுக்குப் பல துவ்பங்கள் காத்து நிற்கின்றன. வீட்டிலோ மனைவி மக்கள் பட்டினி, கணக்கப்பிள்ளைகளோ ' அகப்பட்டமட் ஓம் சுருட்டிக்கொண்டு, கம்பி நீட்டிவிடுகிறார்கள். வேலைக் காரர்கள் பலரும் சம்பளப் பாக்கிக்காகக் கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்க , முனைகிறார்கள். இந்த நிலைமையிலும் அவனது டம்:பம் போகவில்லை. ஒரு விருந்துக்குப் போய் விட்டு, அங்கும் டம்பமாக வயிறார உண்ணாமல், எல்லா வற்றையும் தொட்டுப் பார்த்துவிட்டு, வீட்டுக்குப் பசி யோடு வருகிறான். வீட்டிலோ அன்று குடிக்கக்கூடக் கூழ் இல்லை. எனவே மனைவிக்கும் அவனுக்கும் வாக்குவாதம் உண்டாகிறது. அதன் விளைவாக மனைவி மக்களை வீட்டை விட்டுத் துரத்துகிறான். அந்த அம்மாளோ தெருவில் நின்று புலம்புகிறாள். குழந்தைகளோ நிலைமை தெரியாமல் ஏதேதோ கேட்கின்றன. ஆனால் பெற்ற தாய்க்கோ குழந்தைகளைத் திருப்தி செய்ய முடியவில்லை. கட்டத் துணியில்லாமல் கட்டை போலத் திரிகின்ற மக்களா!-கழுத்தில் கட் டி ய தாலியும் கடையிலே விற்பேனோ மக்களா! "