பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில விதங்கக் குறிப்புக்கள் டம்டாச்சாரி விலாசத்தின் ஆசிரியர் காசி விஸ்வநாத முதலியார் உ.லகானுபவம் நிறைந்தவர். சமூகத்திலே நடமாடி வந்த பல்வேறு மனிதர்களையும், அவர் தன்கு அறிந்திருக்கிறார். பல்வேறு துறைகளிலுமுள்ள மனிதர்கள் எவ்வாறெல்லாம் சுயநல நோக்கத்தோடு தேர்மை யற்றவர்களாக நடந்து கொள்ள முடியும் என்பதையெல்லாம் நன்கு தெரிந்து, அவற்றைப் படை அம்பலப் படுத்தியுள்ளார். உதாரணமாக இந்த நாடகத்தில் வரும் தட்டான், சமையற்காரன், சலவைத் தொழிலாளி, அவைத் தியர் முதலியோரின் பாத்திரங்கள் அனாவசியமாகத் தோற்றிய போதிலும், அந்தத் தொழில்களிலுள்ள குறைபாடுகளையும் மோசடிகளையும் அந்தப் பாத்திரங்கள் மூலமாகவே வெளிப்படுத்த அவை அவருக்கு உதவி யுள்ளன. இதே போன்று சென்னை நகரில் இன்று கூட லேவாதேவித் தொழிலில் ஆதிக்கம் செலுத்திக்கொண் டிருக்கும் . செளகார்கள், செட்டிகள் முதலியோரின் கொள்ளையையும் அவர் நன்கு அம்பலப்படுத்தியுள்ளார். அத்துடன் தகுதியற்றவர்கள் பதவிக்கு வருவதால் நேரும் ஆபத்துக்களையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். உதார ணமாக, டிஸ்கவுண்ட் மாஸ்டர் தனக்குக் கவர்னரே பெரிய உத்தியோகம் தர முன்வந்ததாகப் புளுகியதைக் கேட்டு, டம்ப்னின் வேலைக்காரன் பின்வருமாறு சபையை நோக்கிக் கூறுகிறான்: ஐயாவை ஒருவேளை முனிசிபல் கவுன்சிலில் மெம்பராக வைத்தால், சாக்கடை நாற்றம் மூக்கைப் பிடிக்க வேண்டியதாயிருக்கிறது. தெருவெல்லாம் துர்க்கந்து மெடுத்து, வாந்திபேதி முதலாகிய ரோகங்களுக்கு இடமா