பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 புதிய கருத்துக்களைச் சொல்வது என்பது சிரமம்தான். இதனைப் 'பஞ் சலட்சணத் திருமுக விலாசம் பாடிய வில்லி யப்பப் பிள்ளையும் உணர்ந்து கூறி, அதன் காரணமாக, தமது நூலில் தாசித் தொழிலைப்பற்றி அதிகம் கூறாது விட்டு விடுகிறார். நூலாசிரியரின் வசனப் பகுதிகளெல்லாம் இலக்கியம் நயம் செறிந்தவையல்ல என்றாலும், வாழ்க்கையையும் வழக் கத்தையும் , 'ஓட்டியனவாக அமைந்துள்ளன. எந்தெந்தப் பாத்திரம் எத்தகைய வழக்கைக் கையாளக்கூடுமோ, அதனைச் சரிவரப் பிரதிபலித்துள்ளார். அதன் மூலம் அந்த வசனப் பகுதிகள் உயிர் பெறுகின்றன. வசனப் பகுதிகளில் தான் வாழ்க்கையனுபவமும், நகைச்சுவையும் நன்கு காணப்படு கின்றன. ஆயினும் அவற்றைச் சுவை நிறைந்ததாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆசிரியர் வேண்டாத குட்டிக் கதைகள், சம்பவங்கள் முதலியவற்றைப் புகுத்தி யுள்ளார். எனினும் அந்தக் காலத்து நாடகங்களில் இதுவும் ஒரு நடைமுறையாகவே இருந்து வந்துள்ளது. மேலும் பிறமொழிக் கலப்புக்கு ஆசிரியர் ஒரு சிறிதும் கூசியதாகத் தெரியவில்லை. தெலுங்குச் செட்டியார் தெலுங்கிலேயே பேசுகிறார். இதையேனும் சகித்துக்கொள்ளலாம். ஆனால் டம்பனும் அவனது நண்பர்களும் ஆங்கிலம், உருது, தமிழ் மூன்றையும் அளவுக்கு மீறி அவியலாக்கிப் பேசுவது சமயங் களில் சகிக்க முடியாதவாறு உள்ளது. பிற பொழிக் கலப்பு என்பது பாட்டுக்களில்கூட சமயங்களில் அத்துமீறிப் போகிறது. ஆசிரியர் அதனை ஒரு ஹாஸ்ய உத்தியென்று நினைத்துக்கொண்டார் போலும்! உதாரணமாக, வாரண்டுச் சேவகனின் வரவை, கோர்ட்டு சார்ஜண்டு வந்தான் - வாரண்டுடனே கோர்ட்டு சார்ஜண்டு வந்தான் நீட்டுக் கோட்டு மாட்டி மீட்டுக்களைத் தின்று