பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கொள்ளலாம். பஞ்சத்தில் அடிபட்டு லட்சோபலட்சக் கணக்கான மக்களை வங்கத்திலே பறிகொடுத்துக் கொண் டிருந்த புத்தகால இந்தியா, ஸ்டெர்லிங் நிதியின் பேரால் எவ்வாறு ஆங்கிலேயர்களுக்குக் கோடிக் கணக்கில் கடன் கொடுத்து வந்ததோ, அதேபோல் தாது வருஷ பஞ்சகாலத் திலும் இந்திய நாடு இங்கிலாந்துக்குத் தனது செல்வத்தை வாரிக்கொடுத்தது. 'ஆம். இந்திய மண்ணில் பஞ்சத்தின் கொடுமையால் மக்கள் ஈசலைப்போல் செத்து விழுந்து கொண்டிருந்த காலத்தில், 1877ம் ஆண்டில், இந்திய நாடு 79லட்சம் பவுன் மதிப்புள்ள கோதுமை, அரிசி போன்ற உணவு தானியங்களை ஏற்றுமதி செய்தது. அந்த நூற் முண்டின் இறுதி வரையிலும் பஞ்சம் நீடித்த போதிலும், ஏற்றுமதி குறையவில்லை; மாறாக, அதிகரித்தது. அதே பஞ்சி இந்தியா 1907 ம் ஆண்டில் 93 லட்சம் பவுன் மதிப் புள்ள உணவு தானியத்தை ஏற்றுமதி செய்தது, ஆனால் இந்த இரு ஏற்றுமதிக் காலத்துக்கும் (1875-1903) இடைப்பட்ட காலத்தில், ஒன்றரைக் கோடி மக்கள் பட்டினிச் சாவினால் இறந்தார்கள் என்று அதிகாரபூர் இதமான ஆங்கிலேயரின் கணக்தே கூறுகிறது! இவற்றை அறிந்த பின்னர் பண்டித நேருவும், மகாகவி தாகுரும் எழுதியுள்ள வரிகள் எவ்வளவு உண்மையானவை என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாமல்லவா? வங்காளப் பஞ்சத்தின் கோரத்தையும், அதனைப் பிரதிபலிக்கும் இலக்கியங்கள் தோன்றியதையும் ஆரம் பத்தில் பார்த்தோம். அதைப்போலவே கோரமும் கொடுமையும் மிகுந்த ஒரு பஞ்சம் தமிழ்நாட்டில் நிகழ்ந். திருக்கும்போது, அதனைச் 'சித்திரிக்கக்கூடிய, அக்காலச் சூழ்நிலையைப் பிரதிபலிக்கக்கூடிய தமிழ் இலக்கியங்கள் தோன்றியுள்ளனவா என்ற கேள்வி என்னுள் எழுந்ததுண்டு.' "அதனால் தொடங்கிய வேட்டையின் விளைவாக, அந்தப் பஞ்சத்தைப் பிரதிபலிக்க முனைந்த, குறிப்பிடத்தக்க' .