பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18) என்றாலும் தமிழ் நாட்டைப் பெரும்பாடு படுத்திய தாது வருஷப் பஞ்சத்தைக் குறிப்பிட்டுப் பாடிய பாடல்கள் உண்டா? வாய்மொழி வழக்காக இருந்துவந்த சில நாட்டுப் பாடல் கள் தாது விருஷப் பஞ்சம் பற்றியும் குறிப் பிடுகின்றன. அவற்றில் ஒரு பாடல் அந்தப் பஞ்சத்தில் ஒவ்வொரு மாதத்திலும், அதாவது ஆண்டு முழுவதிலும் மக்கள் என்னென்ன அவதிகள் பட்டார்கள் - என்று விவரிக்கிறது. அந்தப் பாடலின் சில வரிகளைப் பார்த்தாவே, பஞ்சத்தின் கோரம் நமக்கு ஓரளவு புலப்படும். இதோ சில வரிகள்: தாது வருஷப் பஞ்சத்திலே-ஓ! சாமியே! தாய் வேறே! பிள்ளை வேறே!... காட்டுப் பக்கம் நாறு பிணம் - ஓ! சாமியே! வீட்டுப் பக்கம் நூறு பிணம்! ரோட்டுப் பக்கம் நூறு பிணம்! - ஓ! சாமியே! மேட்டுப் பக்கம் நூறு பிணம்! - . ஆத்திலேயும் தண்ணியில்லை!-ஓ! சாமியே! குளத்திலேயும் தண்ணியில்லை!... தண்ணித் தாகத்தால் வறண்டு --ஓ! சாமியே! தவறினது கோடி சனம்! கஞ்சியில்லாம தவித்து-- ஓ! சாமியே! காட்டில் மாண்டது கோடி!... வேதநாயகம் பிள்ளை தாது வருஷப் பஞ்சத்தில் தோன்றிய நாட்டுப் பாடல் களையும், வில்லியப்ப பிள் ளையும், அழகிய சொக்கநாத பிள்ளையும் இயற்றியுள்ள பிரபந்தங்களையும் தவிர, அந்தப்