பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 இந்த இவ் வாமை என்னும் கொடுமையை இல்லாமற் செய். வது என்றைக்கு?' என்று புலவர் அம்பிகையிடம் கேட்கிறார். ஆனால், வறுமை என்ற இந்தக் “குசேல வியாதியைப் போக்கும் சஞ்சீவி மனிதன் வசம்தான் உண்டு!” (பக்த குசேலா) என்று புதுமைப்பித்தன் சொன்ன உண் மையையோ, “இல்லை யென்ற சொல்லை, உலகில் இல்லை பாத வைப்பேன்" என்று சொன்ன பாரதியின் வைராக்கியத் தையோ- அழகிய சொக்கநாதர் அறிந்திருக்கவில்லை; அவர் வாழ்ந்த சூழ் நிலையில் அதனை அறிந்திருக்கவும் நியாய மில்லை. எனவே இல்லாமை என்ற கொடுமையை மனித எத்தனத்தால் தான் ஒழிக்க முடியும் என்ற உணர்வற்று, அ,தனே ஒழிக்கத் தெய்வத்தின் அருளை நாடுகிறார். 'அவரது கருத்து எப்படியிருந்தாலும், விருப்பம் சரியானது தானே. இல்லாமை ஒழியவேண்டும் என்று அவரும் விரும்புகிறார் ஆனால் அந்தக் கொடுமை விரும்பிய மாத்திரத்திலோ அழிந்து நீங்கிவிடுமா? அது நீங்கும் வரையிலும் உயிர் நீங்காதிருக்க வேண்டுமே. ஆனால் இல்லாத மக்களின் நிலைமையோ மிகவும் பரிதாபகரமானது. உ.தறுதம்மா உடலைப் பசிநோய்! மனஊக்கங்களும் சிததம்மா! நிர்க்கதி யாகி ஏழை ஜனங்கள் எல்லாம் கதறுதம்மா! இப்புடிப் படும் புாரதம் கார் நெஞ்சு பதறுதம்மாம் எப்படிப் பிழைப்போம் என்று இந்தப் பஞ்சத்திலே! உள்ளாரும், இல்லாரும் இல்லாமை என்ற கொடுமை என்று நீங்கும் என ஏங்குகின்ற புலவருக்கு, உலகில் , இல்லாதவர்கள் உள்ள (பாரதம் : நெடிய, தொலையாத துன்பம்)