பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 ரா. ராகவையங்கார் எழுதியுள்ள 'சேது நாடும் தமிழும் என்ற நூலில் ' வில்லியப்பரைப் பற்றிய குறிப்பு உண்டா? என்று தேடினேன். அந்நூவில் சேது நாட்டுப் புலவர்கள் வரிசையில் சிவகங்கையைச் சேர்ந்த புலவர்கள் சிலரும் இடம் பெற்றிருந்தார்கள். எனினும் வில்லியப்பரைப் பற்றிய பேச்சு மூச்சே இல்லை! பின்னர் தமிழ்த்தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர் பதிப்பித்துள்ள 'திருப்பூவணநாதர் உலா'வின் முன்னுரையில் ஒரு குறிப்பு தென்பட்டது. திருப்பூவண நாதர் உலரவைத் தாம் பதிப்பிக்க முயன்று வந்த காவத்தில், தமக்கு வில்லியப்ப பிள்ளையும் ஒரு புலவர் மூலம் ஓர் ஏட்டுப் பிரதியைத் தந்துதவியதாகவும், அத்த ஏட்டுப் பிரதியொன்றே தமக்குக் கிடைத்த பரிபூரணமான ஏடு எனவும் உ. வே. சா. கு றிப்பிட்டிருந்தார்... ஆனால் அதிலும் பஞ்சலட்சணத்தைப் பற்றியோ, வில்லியப்பரின் வரலாறு பற்றியோ குறிப்பேதும் இல்லை. அரியதொரு நல்லிலக்கியம் படைத்துத் தந்துள்ள இந்த அற்புதக் கவிஞரான வில்லியப்பரைத் தமிழுலகம் எப்படி, ஏன் மறந்து விட்டது அல்லது துறந்துவிட்டது என்ற புதிர் எனக்கு விளங்கவில்லை.. பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை 'ஒருவர் தான் தமது 'பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், (இலக்கியச் சிந்தனைகள்} என்ற கட்டுரையில் 'எளிய இனிய: கவிதை' என்ற தலைப்பில் பஞ்சலட்சணம் பற்றிப் பின்வரு மாறு குறிப்பிட்டிருந்தார்: * செய்யுள் நெறியில் பழமையைத் தழுவி, தம் காலத்து நிகழ்ச்சியை அமைத்துப் பாடிய நூல் பஞ்சலட்சணம் என்பது. இதனை இயற்றியவர் வில்லிப்டம் பிள்ளை. தாது வருஷத்தில் (1876) நிகழ்ந்த பஞ்சத்தின் கொடுமையே இந்நூற்பொருள். இந்நூல் பொதுமக்கள் விரும்பும் எளிய நடையில் உள்ளது , நகைச்சுவை மிக்கது. நூலின் அமைப்பிலும் கருத்திலும் ஆசிரியரது திறமை நன்கு புலப்படுகிறது. இதனைத் தவிர அக்கட்டுரையில் ' வேறு விவரம் இல்லை, எனினும் பத்தொன்பதாம் நூற்றாண்டின்