பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 படைத்து விட்டிருக்கிறார். பஞ்சலட்சணத்தில் எத்தனை எத்தனையோ விதமான மனோ வுணர்ச்சிகளும் இன்.. துன்பங்களும் காட்சியளித்து நம்மை வியப்பிலும் களிப்பிலும் ஆழ்த்துகின்றன. பஞ்சம் வந்தது ? Kஞ்ச லட்சணத்தில் காணப்படும் நயங்களையெல்லாம் விரித்துரைக்கப் புகுந்தால், அதற்கே ஒரு தனி நூல் எழுத வேண்டியதுதான். எனவே ஆசிரியர் தமது ரசவுணர்ச்சியை எவ்வாறெல்லாம் வெளியிடுகிறார் என்பதைச் சில உதார ணங்கள் மூலம் நாம் பார்க்கலாம். புது வருஷம் பிறக்கிறது. புது வருஷத்தில் மக்களுக்கு எவ்வளவோ நம்பிக்கைகள்; ஆசைகள். வருஷப் பிறப்பைப் பொங்கலெல்லாம் வைத்துக் கொண்டாடுகிறார்கள்; விருந் தாடுகிறார்கள்; பண்டிகைப் பரிசுகள் வழங்குகிறார்கள். ஆனால் இவையனைத்தும் அற்ப சந்தோ ஷமரக மாறிவிடு இன்றன. வானம் பொய்த்து வறட்சி தலை தூக்குகிறது - மழையில்லை என்றிருந்தும் மக்கள் சோசியரை நாடி, கிரக . நிலையில் தோஷம் ஏற்பட்டு விட்டதா என்று கேட்கிறார்கள். சோசியரோ நவக்கிரக தோஷம் கழிந்து விட்டதென்றும், இனி மழை பொழியுமென்றும் உத்தரவாதம் கூறி விடுகிறார். ஜனங்களும் அதை நம்பி வானைப் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். சோசியமும் பொய்த்து விட வில்லை. எப்படி? அதனை ஆசிரியர் கற்பனைத் திறனும், நகைச்சுவையும் ததும்ப வெளியிடுகிறார். ; . - சோசியரை ஆசரித்துக் கேட்க, அவர் "அஞ்சேல்! நவக்ரகத்தின் தோஷமும் இன்றோடே தொலைந்தது காண்!-காசினிக்கு ஜாளை முதல் யோகம் நடக்குது, இனி அஞ்சாறு வேளைக் குள்ளாக மிகுந்த மழை -கோளமெங்கும்