பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235 என்றெல்லாம் திட்டுகிறான். இந்த வேகமான, ஆத்திரமான பேச்சில் ஆசிரியரின் பாஷ்ை வேகமும் நமக்குப் புலப்படத் தான் செய்கின்றது. எல்லாவற்றையும்விட, இந்நூலில் ஆசிரியர் ஓர் அற்புத மான புதுமையையும் உண்டாக்கியிருக்கிறார், சாதாரண மாக, தமிழில் கடவுளர்களை நிந்தித்து நிந்தாஸ்துதியாகப் புலவர்கள் பாடிய பாடல்களெல்லாம் புலவர் கூற்றாகத்தான் அமைவது, வழக்கம். ஒரு சில தனிப் பாடல்கள் தான் கடவு ளர்களே தமது நிலையை நிந்தாஸ்துதியாகக் கூறுவதாக அமைந்துள்ளன என்று சொல்ல வேண்டும். ஆனால், இந்த நாலாசிரியரோ இந்த நிந்தாஸ்துதி முறையை, 'கடவுளின் சர் றாகவே முழுக்கவும் அமைத்து: சோமசுந்தரக் கடவுள் தம்மைப் பற்றியும், தம் மனைவி, தம் புதல்வர்கள், தம் மைத்துனனான திருமால், பிரம்மா ஆகியோரைப்பற்றியும் நிந்தனை யாகப் பேசி, அவர்களது ஏலாத் தனத்தை வெளியிடு வதாக அமைத்துவிடுகிறார். இதனை ஆசிரியர் கையாண்டுள்ள முனற சிலேடை நயமும், கவிதை நயமும் மிக்கதாக அமைந் துள்ளது. உதாரணமாக, பஞ்ச நிலையைக் கூறித் தம்மிடம் உதவி கோரி வந்த மக்களை நோக்கிச் (சோமசுந்தரக் கடவுள் பின்வருமாறு கூறுவ8ெ) தப் பார்க் கவரம்: என் பிழைப்பைக் கேட்டால் எவர்க்கும் நகைப்பாம்! மிகவும் புன் பசியால் வந்தீர் புதல்வர்காள்!-அன்று நான் உங்களுக்கு ஏதேனும் உதவி செய்வோம் என்றால் என் செங்கையில் வேறு ஏதுமுண்டோ செப்புவீர்!--- ' பொங்கறப் உரு வமாய் யானும் பொருந்தி வசித்திடும் ஓர் ஊருண்டு; அவ்வூர் அதுவும் ஒற்றியே!-கார்வளம்சேர் பெற் றிகழ் இந்நகரோ பெண்வழியில் சீதனமாய்த் தொற்றி வந்ததால் எனக்குச் சொந்தமில்லை ...