பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 29 நஷ்டமடைகிறார். நாடகக் கம்பெனி திவாலாகிறது. கம்பெனியிலுள் கா நடிகர்கள் முதல் எடுபிடியாட்கள் வரை எல்லோரும் சம்பளப் பாக்கிக்காக அவரோடு சண்டை பிடிக் சிறார்கள். இறுதியில், அவதானி தமது சாமான்களை யெல்லாம் வந்த விலைக்கு விற்று, அவர்கள் பாக்கியைச் செலுத்திவிட்டு, கம்பெனியை மூடுகிறார். பிறகு நடிகை யுடன் சென்னை வருகிறார். வறிய நிலையிலுள்ள தம்முடன் அவளிருக்க வேண்டியதில்லை என்று சொல்லி, நடிகையைப் பிரிய பூனைகிறார். நடிகையோ அவரை விட்டுப் பிரிய மனமில்லாவிட்டாலும், அவரை அவரது மனைவியோடு சேர்ந்து வாழும்படி ஆலோசனை கூறுகிறாள். ஆனால் வறுமைப் பட்ட நிலையில் மனைவியின் முகத்தில் விழிக்கக் கூசிய அவதானி, தமது செல்வ நிலையைச் சீர்படுத்திய பின்பே மனைவியிடம் செல்ல விரும்புகிறார். எனவே செல்வம் சேர்ப் பதற்கான குறுக்கு வழிகளில் அவரது மனம் செல்கிறது. ரசவாத வித்தை, புதையல் இருக்குமிடத்தைக் காட்டும் மை தயாரித்தல் முதலிய வேண்டாத விவகாரங்களில் தலையிட முனைகிறார், பிறகு . அதனையெல்லாம் விடுத்து, தமக்குத் தெரிந்த தொழிலைக் கொண்டே பிழைக்க முனைகிறார். நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதிக்கொடுக்கிறார். ஆனால் அதனால் போதிய வருமானம் கிட்டவில்லை. நோயும் நொடியும்தான் மிச்சமாகிறது. எனவே அவர் வேறு வழியின்றித் தெய்வங்களின் உதவியை நாடுகிறார். ஆனால் தெய்வங்களோ தத்தம் சங்கடங்களையும் ஏலாத்தனத்தையுமே எடுத்துரைக்கின்றன. இறுதியாக, அவதானி பழனியாண்டவரிடம் போகிறார். அவரும். தாமாக 2. தவுவதற்கில்லை என்று கூறிவிடுகிறார்; எனினும் பாட்டுடைத் தலைவரான நகரத்தார் என்னும் தனவைசியர்களின் செல்வ வளத்தைப் பற்றிக் கூறி, அவர் களிடம் சென்று உதவி கோருமாறு உபதேசிக்கிறார். அதன்படியே அவதானியும் செட்டி நாட்டுக்குச் சென்று,